இது உங்கள் இடம்: மதிப்பதில்லை அரசு!| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: மதிப்பதில்லை அரசு!

Updated : அக் 18, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (54)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்ஆர்.நடராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:சென்னை: நீதிமன்ற உத்தரவுகள், பொதுமக்களிடம் நடைமுறைப்படுத்தப்படும் அளவுக்கு, அரசிடமோ, ஆளுங்கட்சியிடமோ செல்லுபடியாவது இல்லை.சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம், 'தமிழகம் முழுதும் பொது இடங்களில் உள்ள சிலைகளை மூன்று மாதங்களில்
தமிழகம், பொது, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்



ஆர்.நடராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

சென்னை: நீதிமன்ற உத்தரவுகள், பொதுமக்களிடம் நடைமுறைப்படுத்தப்படும் அளவுக்கு, அரசிடமோ, ஆளுங்கட்சியிடமோ செல்லுபடியாவது இல்லை.சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம், 'தமிழகம் முழுதும் பொது இடங்களில் உள்ள சிலைகளை மூன்று மாதங்களில் அகற்ற வேண்டும். அந்த சிலைகளை, 'தலைவர் பூங்கா' உருவாக்கி, அங்கு பாதுகாக்க வேண்டும்' என அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ஒன்று மட்டும் உறுதி.மூன்று மாதங்களுக்கு பின், ஒரு சிலை கூட அகற்றப்பட்டிருக்காது. அந்த உத்தரவை, நீதிமன்றமும் மறந்துவிடும்.அதையும் மீறி, யாராவது ஒருவர் இந்த வழக்கை நீதிமன்ற பார்வைக்கு எடுத்து சென்றால், தமிழக அரசு மேலும் ஒரு ஆண்டு அவகாசம் கேட்கும்; நீதிமன்றமும், 11 மாத அவகாசம் கொடுக்கும். வழக்கு முடிந்து விடும். வழக்கம் போல 11 மாதங்கள் கழித்தும் ஒன்றும் நடக்காது.கடந்த மே மாதம், சென்னை உயர் நீதிமன்றம், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு ஏராளமான உத்தரவுகளைப் பிறப்பித்து, மூன்று மாத அவகாசம் கொடுத்தது. இப்போது, ஐந்து மாதங்கள் முடிந்து விட்டன. நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசு நிறைவேற்றியதா என்றால், இல்லை.

இதற்கு முன் சிலை கடத்தல் வழக்கில், நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. முன்னாள் முதல்வர் பழனிச்சாமி ஆட்சியில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.எதையேனும் அரசு நிறைவேற்றியதா?சில உயிர் பலிகள் நிகழ்ந்த பின் நீதிமன்றம், 'வீதிகளில் பேனர் வைக்கக் கூடாது' என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பேனர் வைக்காமல் எந்த கூட்டம் நடைபெறுகிறது?நீதிமன்றத்திலிருந்து, அரசுக்கு சாதகமான மற்றும் வருவாய் வரக்கூடிய உத்தரவு வந்தால் அரசு உடனே நிறைவேற்றும்.


latest tamil news


அதற்கு சிறந்த உதாரணம், இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்.அரசு, இந்த உத்தரவை செயல்படுத்த காட்டிய அக்கறையை, நாம் அனைவரும் அறிவோம். அதே அரசு, நீதிமன்றத்தின் மற்ற உத்தரவுகளை ஏன் அலட்சியப்படுத்துகிறது? நீதிமன்றமும் ஏன் அதை வேடிக்கை பார்க்கிறது?'கனிம வளத்தை கொள்ளையடிப்பதை, இரும்புக் கரத்துடன் ஒடுக்க வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்தில் கனிம வள கடத்தல் நடந்தபடியே இருக்கிறது.நீதிமன்ற உத்தரவு, பொதுமக்கள் மீது மட்டும் உடனே நிறைவேற்றப்படும். அரசுக்கு அது பொருந்தாது. தீர்ப்பை கண்டவுடன் இரண்டு நாட்களுக்கு, 'ஆஹா, ஓஹோ...' என்று அதைப் பற்றி பெருமை பேசி, நாமும் அதை மறந்து விடுவோம். அடுத்து வேறொரு தீர்ப்பு வரும். இப்படியே காலம் போகும்...நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றவில்லை என்றால், ஒன்றும்பிரச்னை இல்லை என்ற மனோபாவம் அரசுக்கு வந்து விட்டால், அது நாட்டுக்கு நல்லதில்லை. நீதிமன்றத்தில் மதிப்பையும், மாண்பையும் அது குறைக்கும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X