கொழும்பு-இந்தியா மற்றும் இலங்கை ராணுவத்தின் 12 நாள் கூட்டுப் பயிற்சி நிறைவடைந்தது.
இந்தியா, இலங்கை ராணுவத்தினர் இடையே எட்டாவது கூட்டுப் பயிற்சி இலங்கையில் நடந்தது. கடந்த 4ம் தேதி துவங்கிய இந்த 12 நாள் கூட்டுப் பயிற்சி நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.இலங்கைக்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ள, நம் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட வீரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

இது குறித்து நம் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்த கூட்டுப் பயிற்சியில் நம் ராணுவத்தின் 120 வீரர்கள் பங்கேற்றனர். பயங்கரவாதிகளை ஒழிப்பது தொடர்பான பயிற்சியில் இரு நாட்டு வீரர்களும் ஈடுபட்டனர்.இந்த பயிற்சி இரு நாட்டு ராணுவத்தின் திறமை, வீரர்களின் திறன்களை வெளிப்படுத்துவதாக இருந்தது. பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட இது பெரிதும் உதவும். மேலும் இரு நாட்டுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்துவதாகவும் இந்த பயிற்சி அமைந்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE