ஸ்ரீவில்லிபுத்துார்-வெள்ளி ,சனி,ஞாயிறு அன்றும் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டதால் ,திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி நடந்த 5ம் சனிக்கிழமை உற்ஸவத்தை முன்னிட்டு ஆனந்த தரிசனம் செய்தனர்.இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 1:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சுப்ரபாத பூஜைகளை ரகு பட்டர் செய்தார். ஆண்டாள் கிளியுடன் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை அதிகாலை 3:00 மணி முதல் பக்தர்கள் தரிசித்தனர். கடந்த நான்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் கடைசி சனிக்கிழமையான நேற்று இரவு 7:00 மணி வரை ஏராளமான பக்தர்கள் மிகுந்த மனநிறைவுடன் தரிசனம் செய்தனர்.டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.