கம்பம்--கம்பம் பள்ளத்தாக்கில் நேற்று காலை முதல் கனமழை பெய்ததால் திராட்சை தோட்டங்களுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் வீடு திரும்பினர்.கம்பம் பள்ளத்தாக்கில் நேற்று காலை முதல் கனமழை பெய்ய துவங்கியது. வழக்கம் போல லேசான சாரல் சிறிது நேரத்தில் நிற்கும் என நம்பி திராட்சை தோட்டங்களுக்கு வேலைக்கு சென்றனர். ஆனால் மழை தொடர்ந்ததால் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாமல் வீடு திரும்பினர். சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சாகுபடி செய்துள்ள திராட்சை தோட்டங்களில் பழம்பறிப்பு, கவாத்து, பிஞ்சு இறக்குதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பழங்களின் வெடிப்பு இருக்குமா என்பது இன்று தான் தெரியும். ஏற்கனவே விலை குறைந்துள்ள நிலையில், மேலும் குறையும். அறுவடை செய்து களத்தில் உள்ள நெல் பாதிக்கும் என விவசாயிகள் புலம்புகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE