பொது செய்தி

தமிழ்நாடு

பொறுப்பு கமிஷனராக பணியாற்றும் டி.ஜி.பி.,

Added : அக் 17, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது பொறுப்பை தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபு கூடுதலாக கவனித்து வருகிறார்.சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சில தினங்களுக்கு முன், உடல்நிலை பாதிப்பால், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு இதயம் தொடர்பான சிகிச்சை

சென்னை : சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உடல் நிலை பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது பொறுப்பை தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபு கூடுதலாக கவனித்து வருகிறார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சில தினங்களுக்கு முன், உடல்நிலை பாதிப்பால், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு இதயம் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர் மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், கமிஷனர் சங்கர் ஜிவால், மீண்டும் பணிக்கு திரும்பும் வரை, சீனியாரிட்டி அடிப்படையில் கூடுதல் கமிஷனராக உள்ளவர்களிடம், சென்னை போலீஸ் கமிஷனர் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபுவே, சென்னை போலீஸ் கமிஷனர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.இது குறித்து, போலீஸ் கமிஷனர் அலுவலக வட்டாரத்தில் கூறுகையில், 'சென்னை போலீஸ் கமிஷனர் பொறுப்பை, டி.ஜி.பி., சைலேந்திர பாபு கவனிப்பார் என, வாய்மொழி உத்தரவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.'அதனால், நேற்று முதல், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்படும் செய்தி குறிப்பில், சைலேந்திர பாபு, பொறுப்பு கமிஷனர் என, குறிப்பிட்டு வழங்குகிறோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X