பொது செய்தி

தமிழ்நாடு

எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்கு 1977.8 கோடிக்கு ஒப்புதல்

Added : அக் 17, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம்--மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ரூ.1977.8 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.மதுரை தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்த அவர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார்.பின் அவர் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
 எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்கு 1977.8 கோடிக்கு ஒப்புதல்

திருப்பரங்குன்றம்--மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ரூ.1977.8 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.மதுரை தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்த அவர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார்.பின் அவர் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் வரவேண்டும் என்பது அனைவரது விருப்பம். 2018ல் ரூ.1864 கோடியை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. 45 மாதங்களில் பணிகள் முடிக்கவேண்டும்என முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஜிகா நிறுவன நிதி உதவியில் பணிகள் தொடங்கவும் மாநில அரசு நிலங்களை இலவசமாக கொடுப்பதுஎன முடிவு செய்யப்பட்டது.அங்கு 150 படுக்கைகள்கொண்ட தொற்றுநோய் பிரிவையும் கூடுதலாக துவக்குவது என்றும் அதற்கும் சேர்த்து ரூ. 1977.8 கோடி அளவில் கடன் மற்றும் மூலதன உதவியுடன் மத்திய அரசு ஜிகா நிறுவனத்தை நாடி உள்ளது. நிறுவனமும் ஒப்புதல் வழங்கியுள்ளது. சுற்றுச்சுவர் பணிகள் முடிந்தாலும், மருத்துவமனை கட்டடங்கள் எந்தெந்த பகுதியில் அமைய வேண்டும் என அதற்கான திட்ட வடிவங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்க வேண்டும் என மத்திய அரசிடம் பேசி வருகிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X