பொது செய்தி

தமிழ்நாடு

புத்தக வினியோகம் தாமதம் வகுப்புகள் நடத்துவதில் சிக்கல்

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை- --எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ பாட புத்தகங்களின் வினியோகம் தாமதமாகி உள்ளது. இதனால், வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ தேர்வு முறை மற்றும் சமச்சீர் கல்வி திட்டம் அமலில் உள்ளது. முதல் மூன்று மாதங்களுக்கு, முதல் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு

சென்னை- --எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ பாட புத்தகங்களின் வினியோகம் தாமதமாகி உள்ளது. இதனால், வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



latest tamil news


தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ தேர்வு முறை மற்றும் சமச்சீர் கல்வி திட்டம் அமலில் உள்ளது. முதல் மூன்று மாதங்களுக்கு, முதல் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும்.அதன்பின், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடம் நடத்தப்படும். ஜன., முதல் மார்ச் வரை மூன்றாம் பருவ பாடங்கள் நடத்தப்படும்.

இந்த ஆண்டு முதல் பருவத்துக்கான புத்தகங்கள் வழங்கி, பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுகள் மற்றும் முதல் பருவ தேர்வுகள் முடிந்து விடுமுறையும் முடிந்துள்ளது.பள்ளிகளில் 18ம் தேதி முதல், இரண்டாம் பருவ பாடங்களை நடத்த வேண்டும். இரண்டாம் பருவ பாடங்களை முடிக்க, இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.


latest tamil news


இந்நிலையில், இரண்டாம் பருவ பாட புத்தக வினியோகத்தை, பள்ளி கல்வித் துறை இன்னும் துவங்காமல் தாமதம் செய்துள்ளது.ஏற்கனவே, கொரோனா கட்டுப்பாடுகளால், பள்ளிகளில் வகுப்புகள் நடத்தும் நேரமும், நாளும் குறைந்துள்ள நிலையில், பள்ளிக் கல்வியின் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது.இதனால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு உரிய காலத்தில் வகுப்புகள் எடுக்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் பாட புத்தக வினியோகத்தை துவக்க வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
17-அக்-202111:20:41 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN திமுகவின் வளர்ந்து வரும் தலைவரும் ஆபாச பட்டிமன்ற பேச்சாளர் லியோனியை கல்வித்துறைக்கு போட்டதே இதற்கு தான். புனிதமான கல்வியை தயவு செய்து சீர்குலைக்க வேண்டாம். திமுகவுக்கு ஓட்டு போட மக்களுக்கு செய்யும் துரோகம் குழந்தைகள் கல்வியில் மெத்தனமாக இருப்பது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
17-அக்-202108:24:27 IST Report Abuse
duruvasar கால்டுவெல் நிறைய ஆராய்ச்சி புத்தகங்களை எழுதியிருக்கிறார். அதிலிருந்து மாணவர்கள் முக்கியமாகஅறிந்து கொள்ள வேண்டிய முக்கிய சரித்திர நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து பாடமாக வைக்க அரும்பாடு படவேண்டியிருக்கிறது. திண்டுக்கல் லியோனி அய்யா, சுப வீரபாண்டியன் அய்யாவும் இரட்டை குழல் துப்பாக்கியாக இதற்காக தினமும் 17 1/2 மணி நேரம் இரவும் பகலுமாக கண்விழித்து பணியை முடிக்க முயன்று வருவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
17-அக்-202108:18:16 IST Report Abuse
duruvasar கால்டுவெல் நிறைய ஆராய்ச்சி புத்தகங்களை எழுதியிருக்கிறார். மாணவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய சரித்திர நிகழ்வுகளை அலசி , ஆராய்ந்து பாடமாக வைக்க அரும்பாடு படவேண்டியிருக்கிறது. திண்டுக்கல் லியோனி அய்யாவும், சுப வீரபாண்டியன் அய்யாவும் இரட்டை குழல் துப்பாக்கியாக இதற்காக தினமும் 17 1/2 மணி நேரம் உழைப்பாக தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X