பொது செய்தி

தமிழ்நாடு

நவ.,10ல் உண்ணாவிரதம்; அரசு டாக்டர்கள் அறிவிப்பு

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை-சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, நவம்பர் 10ல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக, அரசு டாக்டர்கள்அறிவித்துள்ளனர்.து குறித்து, அரசு டாக்டர்கள் சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள்பிள்ளை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற போது அதிகமாக இருந்த கொரோனா தாக்கத்தை, டாக்டர்களின் உழைப்பால் குறைத்துள்ளோம். ஆனாலும், அரசு

சென்னை-சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, நவம்பர் 10ல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக, அரசு டாக்டர்கள்அறிவித்துள்ளனர்.



latest tamil news



து குறித்து, அரசு டாக்டர்கள் சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள்பிள்ளை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற போது அதிகமாக இருந்த கொரோனா தாக்கத்தை, டாக்டர்களின் உழைப்பால் குறைத்துள்ளோம். ஆனாலும், அரசு டாக்டர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாதது வருத்தம் அளிக்கிறது.சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இருப்பினும், இங்குள்ள டாக்டர்களுக்கு மிக குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது.


latest tamil news


தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், முதற்கட்டமாக மதுரையில், வரும் 20ம் தேதி காலை 10:00 மணியளவில் தர்ணா போராட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, சென்னையில் நவம்பர் 10ல் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.கர்நாடகாவில், அரசு டாக்டர்கள் போராட்டத்தை துவங்கும் முன், ஊதிய கோரிக்கையை முழுமையாக அம்மாநில அரசு நிறைவேற்றி உள்ளது. அதுபோல, போராட்டத்தை இங்கு துவங்கும் முன், ஊதிய கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-அக்-202115:23:31 IST Report Abuse
ஆரூர் ரங் இதுக்குதான் கடவுளுக்கு இணையாக டாக்டர்களை சொல்லுராங்க .( கடவுள் ஸ்டிரைக் செய்வதில்லை 🤣னு சமாளிக்கத் வேண்டாமே).. கூடுதலாக தசம பாகம் கொடுத்து புண்ணியம் தேடுங்க விடியல் 😎அரசே. கர்த்தர் ஆசீர்வாதம் கிடைக்கும். அவரு போட்ட பிச்சை பதவியாச்சே
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
17-அக்-202114:11:01 IST Report Abuse
Vena Suna புது டாக்டர்ஸ் போடவும். வீட்டிற்கு அனுப்பவும் இவர்களை.
Rate this:
Cancel
17-அக்-202110:47:18 IST Report Abuse
சம்பத் குமார் 1). தமிழக அரசாங்கம் மருத்துவர்களின் கோரிக்கையை போர் கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.2). அமெரிக்காவில் தினமும் 2000 மற்றும் ரஷ்யாவில் தினமும் 1000 என்று தற்சமயம் கொரனோ மரணங்கள் நிகழ்ந்து வருவதை நாம் தொலைக்காட்சி வாயிலாக அறிய முடிகிறது.3). இத்தனைக்கும் அந்த நாடுகள் வல்லரசு மற்றும் குறைவான ஜனத்தொகை மற்றும் நல்ல மருத்துவ உள் கட்டமைப்பு வசதிகள் கொண்டவை.4).கொரனோ காலத்தில் மற்றும் தற்பொழுதும் மற்றும் எப்பொழுதும் நம் பொது நல மருத்துவர்கள் திறம்பட சூழ்நிலையை நிர்வகித்து வந்துள்ளார்கள்.5). ஆசிரியர்கள் சம்பளத்தை கொஞ்சம் குறைத்து மற்ற மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு வழங்கலாம். நன்றி ஐயா. ஹரி ஓம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X