பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக புறநோயாளிகள் பிரிவு செயல்படுத்த திட்டம்

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
மதுரை,-''மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக புறநோயாளிகள் பிரிவை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.மதுரை அரசு மருத்துவமனையில் 400 கோடி ரூபாயில் நடக்கும் கட்டுமான பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.பின் அவர் கூறியதாவது: ஜிகா திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பிலான மருத்துவமனை

மதுரை,-''மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக புறநோயாளிகள் பிரிவை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.



latest tamil news


மதுரை அரசு மருத்துவமனையில் 400 கோடி ரூபாயில் நடக்கும் கட்டுமான பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.பின் அவர் கூறியதாவது: ஜிகா திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர அடி பரப்பிலான மருத்துவமனை கட்டுமானம் அடுத்தாண்டு அக்டோபரில் முடியும். தமிழகத்தில் 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகினர். 3,187 பேர் பாதிக்கப்பட்டதில், 351 பேர் சிகிச்சையில் உள்ளனர். டெங்கு தாக்கம் குறைவாகவே உள்ளது.


latest tamil news


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் செயல்படுவதற்கான நிதியுதவியை மத்திய அரசு வழங்க உள்ளது.தற்காலிக புறநோயாளிகள் பிரிவை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. மதுரை அரசு மருத்துவ கல்லுாரி எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு 250 'சீட்' கிடைத்தது பெருமையான விஷயம்.

அதற்கான வகுப்பறை, நர்ஸ், டாக்டர்கள் நியமனம் குறித்து ஆய்வு செய்துள்ளோம். கொரோனா இறப்பில் 34 பேருக்கு காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, விருதுநகரில் 380 கோடி ரூபாயில் கட்டப்படும் அரசு மருத்துவ கல்லுாரி கட்டட பணிகளை ஆய்வு செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-அக்-202116:54:33 IST Report Abuse
Mani . V எங்கன வேப்ப மரத்தடியிலையா? (எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்கு 1977.8 கோடிக்கு ஒப்புதல்)
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-அக்-202116:27:23 IST Report Abuse
Bhaskaran இதிலிருந்து தான் உதயநிதி ஒரு செங்களெடுத்து கொண்டுபோனாரு
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
17-அக்-202116:26:49 IST Report Abuse
M  Ramachandran அதுயென்ன மதுரை மருத்துவ கல்லூரி போர்டில் ஓரியாவா அல்லது சிங்களமா எழுத்துக்கள் காணப்படுகிறது.தமிழய் காணோம்.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
17-அக்-202119:28:03 IST Report Abuse
Dhurveshஉங்க மோடி அறிவிச திட்டம் அதுவும் 4 வருடம் முன்னர் / இப்பவும் இன்னும் rented PLACE கேவலம் எப்படி தமிழர்களை மோடி ஏமாற்றி இருக்கார் பாருங்க , மற்ற aiims எல்லாம் திறக்கும் நிலையில் உள்ளது எப்படி தமிழர்களை இளிச்சவாயன்கள் என்று எண்ணியதால் தான் உங்களுக்கு ஒத்த ஒட்டு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X