பொது செய்தி

தமிழ்நாடு

'மெகா' முகாம் இல்லை; இன்று தடுப்பூசி உண்டு

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.மூன்றாம் அலை பரவலை தடுக்க, தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.அதன்படி, வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில், 'மெகா' தடுப்பூசி முகாமை அரசு நடத்தி வருகிறது. இதுவரை நடந்த, ஐந்து கட்ட மெகா தடுப்பூசி

சென்னை-தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.



latest tamil news


மூன்றாம் அலை பரவலை தடுக்க, தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.அதன்படி, வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில், 'மெகா' தடுப்பூசி முகாமை அரசு நடத்தி வருகிறது. இதுவரை நடந்த, ஐந்து கட்ட மெகா தடுப்பூசி முகாம்களில், 1.10 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டது.இந்நிலையில், ஆறாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம், இன்று நடைபெற இருந்தது.

ஆனால், பண்டிகை காலம் மற்றும் தொடர் விடுமுறை என்பதால், பொது மக்கள் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்றுள்ளனர். அதனால், மக்கள் வரத்து குறைவாக இருக்கும் எனக் கருதி முகாம் நடைபெறவில்லை.


latest tamil news


இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆறாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம், அடுத்த வார ஞாயிற்றுக் கிழமையான 24ம் தேதி நடைபெறும். இன்று வழக்கமான இடங்களில், தடுப்பூசி செலுத்தப்படும்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-அக்-202110:31:46 IST Report Abuse
சம்பத் குமார் 1) இன்னும் ஒருமாதம் காலம் அல்லது 6 வாரங்கள் இந்த மாதிரி தடுப்பூசி முகாம்கள் மற்றும் வீடு தேடி சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள செய்ய வேண்டும். இந்த 6 வாரங்களுக்கு பிறகு வராதவர்கள் கண்டிப்பாக எந்த காலத்திலும் வர மாட்டார்கள். 2).அதன் பின்னர் கட்டாய தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவிக்க வேண்டும்.3). சந்தேகம் மற்றும் பயப்படுவோருக்கு அரசு மருத்துவமனையில் தக்க பரிசோதனைகள் செய்து தேவைப்பட்டால் அங்கேயே இரண்டு ஒரு நாளைக்கு தங்கியிருந்து தடுப்பூசி எடுத்துக் கொள்ள செய்ய வேண்டும். நன்றி ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X