தலிபான் தலைவர் பலி?

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
காபூல்-தங்கள் அமைப்பின் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடா, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக, தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.தலிபான் அமைப்பை துவங்கிய முல்லா உமர் ௨௦௧௬ல் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து தலிபான் அமைப்பின் தலைவராக ஹிபத்துல்லா அகுந்த்ஸடா பொறுப்பேற்றார். அவர் எப்படியிருப்பார்,


காபூல்-தங்கள் அமைப்பின் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸடா, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக, தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.



latest tamil news


தலிபான் அமைப்பை துவங்கிய முல்லா உமர் ௨௦௧௬ல் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து தலிபான் அமைப்பின் தலைவராக ஹிபத்துல்லா அகுந்த்ஸடா பொறுப்பேற்றார். அவர் எப்படியிருப்பார், எங்கிருக்கிறார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.

ஆப்கனில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் ஹிபத்துல்லா கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. இதை தலிபான்கள் மறுத்தனர்.இதற்கிடையே ஆப்கனை தலிபான்கள் கடந்த ஆகஸ்டில் மீண்டும் கைப்பற்றினர். இதையடுத்து, ஹிபத்துல்லா வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.


latest tamil news


ஆனால் அவரை பற்றி எந்த விபரமும் வெளியாகவில்லை. இந்நிலையில், தலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினர் அமித் ஷேக் நேற்று கூறுகையில், ''தலிபான் தலைவர் ஹிபத்துல்லா கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
17-அக்-202107:50:00 IST Report Abuse
duruvasar நாதஸ் கூட நான் திருந்திட்டேனு அவரே சொன்னாரு. ஆனா வெத்தலை பாக்கு வாங்க போனபோது மறுபடியும் அவர் குணத்தை காட்டினாரு. தாலிபானை கும்புடுகிற தமிழ்நாட்டிலிருப்போரே இதை நம்பமாட்டார்கள். அப்ப இவ்வளவு நாள் சொன்னது பொய் தானே. இதை எந்த தாலிபான் பக்தனாவது ஒத்துப்பானா. இதெல்லாம் ஊரை ஏமாத்தற வேலை.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-அக்-202107:16:13 IST Report Abuse
Kasimani Baskaran வெகு விரைவில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டு பலம் குன்றிவிடுவார்கள். மீதம் இருப்பவர்கள் ஐ எஸ் ஐ எஸ்ஸில் சேர்ந்து சிரியா அளவுக்கு ஆப்கானிஸ்த்தானை முன்னேற்றி விடுவார்கள்.
Rate this:
Cancel
17-அக்-202107:05:15 IST Report Abuse
அப்புசாமி படத்துல இருக்குற 11 பேரைப் பாத்தா பாவம இருக்கு. ஆளுக்கு ஒரு தற்கொலைப் படை வெச்சிருப்பாங்க. யார் யாரைப் போட்டுத் தள்ளப் போறாங்களோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X