2021 அமெரிக்க-இந்திய ராணுவ கூட்டுப்பயிற்சி துவக்கம்

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அலாஸ்கா: அமெரிக்க இந்திய ராணுவம் 17-வது முறையாக இணைந்து பயிற்சியில் ஈடுபடும் நிகழ்ச்சி அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த கூட்டுப் பயிற்சிக்கு 'எக்ஸ் யூத் அபியாஸ் 21' என்று பெயரிடப்பட்டுள்ளது.அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் தங்களது ராணுவ பாதுகாப்பை பலப்படுத்த ஆண்டுதோறும் 14 நாட்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த கூட்டுப்

அலாஸ்கா: அமெரிக்க இந்திய ராணுவம் 17-வது முறையாக இணைந்து பயிற்சியில் ஈடுபடும் நிகழ்ச்சி அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த கூட்டுப் பயிற்சிக்கு 'எக்ஸ் யூத் அபியாஸ் 21' என்று பெயரிடப்பட்டுள்ளது.



latest tamil news


அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் தங்களது ராணுவ பாதுகாப்பை பலப்படுத்த ஆண்டுதோறும் 14 நாட்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த கூட்டுப் பயிற்சியின்போது இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து அவசரகால செயல்பாடுகள், தாக்குதல்களை சமாளிக்க கருத்துகள் மற்றும் அறிவை அறிவுசார் உடைமைகளைப் பகிர்வது வழக்கம்.

மேலும் பயங்கரவாதத்திற்கு எதிராக இருநாடுகளும் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்று இந்த கூட்டுப் பயிற்சியின் போது ராணுவ வீரர்களுக்கு மூத்த அதிகாரிகள் பயிற்சி அளிப்பர்.

இந்த கூட்டுப் பயிற்சியில் 300 அமெரிக்க இராணுவ வீரர்களும் ஏழாவது மெட்ராஸ் பட்டாலியன் குழுவைச் சேர்ந்த 350 இந்திய ராணுவ வீரர்களும் கலந்துகொண்டனர். இந்த கூட்டுப் பயிற்சியின் துவக்க விழாவில் இரு நாட்டு தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.

விழாவில் பேசிய அமெரிக்க ராணுவ கமாண்டர் பிரயான் அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளின் படைகளும் தங்களது எண்ணங்கள், புதுமையான ராணுவ உத்திகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள வலியுறுத்தினார். இதன்மூலமாக இரு நாட்டு ராணுவமும் பல புதிய ராணுவ நுணுக்கங்களை கற்றறிய முடியும் என்று அவர் தெரிவித்தார்.


latest tamil news


கடினமான காலநிலைகளில் ராணுவ வீரர்கள் போர்சூழலை எவ்வாறு சமாளிக்க வேண்டும், குளிர் பிரதேசங்களில் பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்று இருநாட்டு வீரர்களும் இந்த 14 நாள் பயிற்சியில் கற்றறிவர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
17-அக்-202115:45:03 IST Report Abuse
M  Ramachandran நம் இந்தியா வீரர்கள் உயரமான மலை ப்ராடெலாசத்தில் எப்படி எல்லையை காப்பது என்று நிச்சயம் நக்ம் ராணுவத்திற்கு நம் எல்லையில் சமீப கால யுத்தங்கள் நடத்தி நல்ல பாடங்கள் பெற்றுள்ளனர். அமெரிக்காவிற்கு இது போனற சூழ் நிலைய இல்லய்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X