பொது செய்தி

இந்தியா

சபரிமலை நடை திறப்பு; மேல்சாந்தி இன்று தேர்வு

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021
Share
Advertisement
சபரிமலை-ஐப்பசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பபட்டது.இன்று புதிய மேல்சாந்தி தேர்வு நடக்கிறது.கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து விளக்கேற்றினார். வேறு பூஜைகள் கிடையாது. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும்

சபரிமலை-ஐப்பசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பபட்டது.



latest tamil news


இன்று புதிய மேல்சாந்தி தேர்வு நடக்கிறது.கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து விளக்கேற்றினார். வேறு பூஜைகள் கிடையாது. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் அபிஷேகம், நெய்யபிஷேகம், கணபதி ஹோமம் நடக்கும். அக்., 21 வரை பூஜைகள் நடைபெறும்.

தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும். இன்று காலை 10:00 மணிக்கு புதிய மேல்சாந்தி தேர்வு நடக்கிறது. நேர்முக தேர்வில் தேர்வான ஒன்பது பேரில் ஒருவர் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார். இவர், வரும் கார்த்திகை முதல் தேதியிலிருந்து ஓர் ஆண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்வார்.பம்பையில் வெள்ளம்ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு இன்று காலை முதல் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.


latest tamil news


இந்நிலையில், கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கன மழையால் பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை தொடரும் பட்சத்தில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும், நாளையும் நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் சபரிமலை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X