இந்தியா

மதுக்கடைகளை அகற்றக் கோரி கையெழுத்து இயக்கம்

Added : அக் 17, 2021
Share
Advertisement
புதுச்சேரி : முதலியார்பேட்டை நுாறடி சாலையில், பள்ளி மற்றும் குடியிருப்புகள் அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.முதலியார்பேட்டை, நுாறடி சாலையில் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகள் உள்ளன. இதனால் பள்ளி மாணவ - மாணவிகள், பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.இந்த மதுபானக் கடைகளை
 மதுக்கடைகளை அகற்றக் கோரி கையெழுத்து இயக்கம்

புதுச்சேரி : முதலியார்பேட்டை நுாறடி சாலையில், பள்ளி மற்றும் குடியிருப்புகள் அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.முதலியார்பேட்டை, நுாறடி சாலையில் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகள் உள்ளன.

இதனால் பள்ளி மாணவ - மாணவிகள், பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.இந்த மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், நுாறடி சாலையில் பள்ளி, குடியிருப்பு மத்தியில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி நேற்று ஆம் ஆத்மி கட்சியினர், மாநிலத் தலைவர் ரவி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடத்த மரப்பாலம்சந்திப்பு அருகே திரண்டனர்.தகவலறிந்த முதலியார்பேட்டை போலீசார் சென்று, தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் போராட்டம் கூடாது.மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர்.அதையடுத்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, மதுபானக் கடைகளைஅகற்ற அரசை வலியுறுத்தி,மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X