பொது செய்தி

இந்தியா

கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை: 19 பேர் பலி

Updated : அக் 18, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
கோட்டயம்: கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. பல இடங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அதில் 19 பேர் உயிரிழந்த நிலையில், பலரை காணவில்லை. பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் விமானபடை மற்றும் தேசிய

கோட்டயம்: கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. பல இடங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அதில் 19 பேர் உயிரிழந்த நிலையில், பலரை காணவில்லை. பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் விமானபடை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை முதல் மழை அளவு குறைந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து பெய்து வந்தாலும் வெள்ளம் ஏதும் ஏற்படவில்லை.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சிலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜயனுடன் பேசி உள்ளேன். பாதிக்கப்பட்டோர் மற்றும் காயமடைந்தோருக்கு உதவ அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலத்திற்காக வேண்டி கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.latest tamil newsகேரளாவில் கோட்டயம் மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.அங்கு 4 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டிக்கல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேரை காணவில்லை. 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.. கூட்டிக்கல் கிராமத்தில் பலப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 வீடுகள் அடித்து செல்லப்பட்டன.
கோட்டயம் மாவட்டத்தில் மீட்பு பணிகளுக்காக ராணுவம் மற்றும் விமானப்படையினரின் உதவி நாடப்பட்டு உள்ளது. இதனால், ராணுவ குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.


latest tamil news


இடுக்கி மாவட்டம் பூவஞ்சி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும் 10 பேரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம்புலன்ஸ், படகு உள்ளிட்டவற்றுடன் ஆலப்புழா, எர்ணாகுளம் பகுதிகளில் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் 22 முக்கிய அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மேலும் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புழா அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


latest tamil news


பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திருவனந்தபுரம், கோட்டயம் மாவட்டங்களிலும் மீட்புபணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.


பல பகுதிகளில் ரெட் அலர்ட்


பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாட்டில் ஆரஞ்சு அலர்ட்டும், கண்ணூர் மற்றும் காசர்கோட்டில் மஞ்சள் நிற அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
18-அக்-202110:02:28 IST Report Abuse
Srivilliputtur S Ramesh கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சிலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் மிகுதியாக நதிகளில் ஓடும் தண்ணீரை இங்கு கிழக்கே, தமிழ் நாட்டின் பக்கமாக திருப்பி விடலாம். ஆனால், மலையாளிகளுக்கு அந்த தாராள மனசு இல்லை. இது போல மழை நீர் வெள்ளம் வந்து நூற்றுக்கணக்கில் மக்கள் இறந்து போனால், அவர்களுக்கு ஒரு வேளை புத்தி வரலாம்.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
18-அக்-202107:58:07 IST Report Abuse
தியாகு கேரளாவில் மூர்க்கர்கள் கூட்டம் அதிகம். கணக்கில்லாமல் குழந்தைகள் பெற்றுக்கொண்டு ஆறு, ஏரி, குளங்கள், மலைகள், காடுகள் இவற்றை அழித்து வீடுகள் கட்டிக்கொள்வார்கள். இயற்கைக்கு கொஞ்சமும் மரியாதை கொடுக்கத் தெரியாதவர்கள் இந்த மூர்க்கர்கள். வீட்டில் செல்ல பிராணி கூட வளர்க்க மாட்டார்கள். அவ்வளவு கல் நெஞ்சம் படைத்தவர்கள் மூர்க்கர்கள். அதனால் இயற்கை பதிலுக்கு திரும்ப தருகிறது. தவிரவும் அய்யப்பனின் புனிதத்தை கெடுத்த உண்டியல் குலுக்கிகள் மற்றும் ஊழல் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு கிடைத்த தண்டனை. இதன் பெயர்தான் கர்மா.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
18-அக்-202107:39:15 IST Report Abuse
 N.Purushothaman சாஸ்தாவை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை .....இறைவன் பல ரூபத்தில் கேரளாவை தண்டிக்கிறார் ....அதர்மம் அதிகமானால் அதற்கான கர்மாவும் அதன் எதிர்வினையும் உருவாகத்தானே செய்யும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X