பொது செய்தி

தமிழ்நாடு

பகுத்தறிவு கண்கள் எல்லாம் பாழாய் போய் விட்டன.. இவர்கள் கூச்சல் எல்லாம் எப்போதும் வீண் தான்!

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் வெறும் சடங்கும், சம்பிரதாயமும் அல்ல. இந்திய தேசத்தின், கல்வி - தொழில் வளர்ச்சிகளின் அடையாளங்கள் அவை. வறட்டு பகுத்தறிவு பார்வையில் பார்க்காமல் அறிவுக் கண்ணைத் திறந்து பார்க்க வேண்டும்.பகுத்தறிவு கண்கள் எல்லாம் பாழாய் போய் விட்டன. நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தசரா பண்டிகை
பகுத்தறிவு கண்கள் எல்லாம் பாழாய் போய் விட்டன.. இவர்கள் கூச்சல் எல்லாம் எப்போதும் வீண் தான்!

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:
ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் வெறும் சடங்கும், சம்பிரதாயமும் அல்ல. இந்திய தேசத்தின், கல்வி - தொழில் வளர்ச்சிகளின் அடையாளங்கள் அவை. வறட்டு பகுத்தறிவு பார்வையில் பார்க்காமல் அறிவுக் கண்ணைத் திறந்து பார்க்க வேண்டும்.


பகுத்தறிவு கண்கள் எல்லாம் பாழாய் போய் விட்டன. நாடு முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தசரா பண்டிகை கோலாகலமாக நடக்கிறது. இவர்கள் கூச்சல் எல்லாம் எப்போதும் வீண் தான்!தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி:
இந்த நான்கு மாத காலத்தில், அ.தி.மு.க., இருக்கும் இடம் தெரியாமல் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அந்தக் கட்சிக்கு இனிமேல் எதிர்காலம் இல்லை என்று சொல்லும் தேர்தலாக உள்ளாட்சி தேர்தல் அமைந்துள்ளது.


இப்படித் தான், ஐந்தாண்டுகளுக்கு முன், தி.மு.க.,வின் நிலை இருந்தது. இப்போது ஆளும் கட்சியாகவில்லையா... நம்பிக்கை தான் வாழ்க்கை!விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வன்னியரசு பேட்டி:
அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரிகளே இல்லை என்றார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையுடன், எதிர்க்கட்சிகளே இல்லை என்ற இருமாப்பு எங்களுக்கு இல்லை என்கிறார்.


ஸ்டாலின் நியாயமாகத் தான் பேசுகிறார். ஆனால், உங்கள் தலைவர் திருமா தான், வாயைத் திறந்தாலே ஹிந்து விரோதம், ஹிந்துக்கள் எதிர்ப்பு. எப்ப தான் அவர் திருந்த போகிறாரோ!latest tamil news


தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை:
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வாரம் முழுவதும் பொதுமக்களின் வழிபாட்டுக்காக அனுமதி வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. பா.ஜ., தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுப்பதற்கு, 20 நாட்கள் முன்னரே நான் கோரிக்கை வைத்து விட்டேன்.


ஸ்டாலினை பாராட்டும் போதும் கூட, பா.ஜ., தலைவரை மட்டம் தட்டும் இந்த திறமை, காங்கிரசில், 'ஆக்டிவாக' முன்னர் இருந்த போது உங்களிடம் இல்லையே!தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், கே.ஆர்.பெரியகருப்பன் அறிக்கை:
ஆயுத பூஜையை முன்னிட்டு, தொடர்ந்து 15 வருடங்களாக எனது சொந்த நிதியிலிருந்து நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில் திருப்பத்துார் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.


நல்லவேளை ஆயுத பூஜை என்பதை மறைத்து, 'ஆயுதங்களை வழிபடும் நாளை முன்னிட்டு...' என, உங்கள் கட்சி ஊடகங்கள் போல சொல்லாமல் இருந்தீர்களே!தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி:
அமலாக்க இயக்குனரகம் தனி ஒரு பிரிவாக செயல்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. எனவே, அந்த துறையில் இருக்கும் அதிகாரிகளை சி.பி.ஐ.,யின் பொருளாதார குற்றங்கள் பிரிவுக்கு மாற்றி, அமலாக்க இயக்குனரகத்தையே காலி செய்து விட வேண்டும்.


அமலாக்க இயக்குனரகம் மீது உங்களுக்கு அப்படி என்ன காண்டு... அந்த பிரிவையே கலைக்க வேண்டும் என்கிறீர்கள்... வெளிநாடு போக விடாமல் தடுத்து விட்டனரோ!latest tamil news


த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:
ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல், தேர்தல் முடிவு வரை தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை. ஜனநாயகம் தோல்வி அடைந்திருக்கிறது. தமிழக மக்களுக்கு இது பெரிய ஏமாற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


உள்ளாட்சி தேர்தலில் பணம் தான் விளையாடியது என்றனர்... தேர்தல் ஆணையமும் நேர்மையாக செயல்படவில்லை என்கிறீர்களே. நிலைமை பரிதாபம் தான்!இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை:
தமிழக கோவில்கள் வழிபாட்டுத்தலம் மட்டுமின்றி, வாழ்வாதாரத்தின் அடிப்படையாகவும் இருந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடு விதிகள்படி, கோவில்களை திறக்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.


ரஜினி அரசியலுக்கு 'டாட்டா' காண்பித்து விட்டார். அவரால் அடையாளம் காட்டப்பட்ட உங்களுக்கு இன்னும் அரசியல் ஆசை போகவில்லை போலிருக்கிறதே!விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி:
அ.தி.மு.க.,வுக்கு வலுவான தலைமை அமையவில்லை. பா.ஜ.,வை சார்ந்து இருக்கும் வரை அதன் சரிவு தொடரும்.


பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த போது, இதை எல்லாம் மறந்து விட்டீர்களா அல்லது மறக்கடிக்கப்பட்டீர்களா?தமிழக பா.ஜ., கலாசார பிரிவு தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை:
கருணாநிதி மற்றும் அண்ணாதுரை பற்றி புத்தகத்தில் இருந்ததை எழுதியதற்காக ஒருவரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். ஆனால், விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் வன்னியரசு, பிரதமர் மோடி பற்றி தவறான செய்தியை பரப்புகிறார். தமிழக அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது.


வன்னியரசு மீது நடவடிக்கை எடுத்தால், கூட்டணியில் குழப்பம் ஏற்படும். கிராமங்கள்தோறும் சென்று, ஸ்டாலின் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்வர் என்ற பயமாக இருக்கும்!

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
17-அக்-202118:27:43 IST Report Abuse
DVRR பகுத்தறிவு என்று அப்போது அந்த சொரியான் தனது கையில் எடுத்தானோ அன்றே அந்த பகுத்தறிவு சீரழிந்து போய் விட்டது தான் உண்மையான இந்துக்களுக்கு தெரியும் திராவிட திருட்டு இந்துக்களுக்கு தெரியாது
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
17-அக்-202116:03:52 IST Report Abuse
M  Ramachandran திருமா ஒரு பச்சோந்தி என்பதய் அடிக்கடி நினைவு படுத்தி கொண்டிருக்கிறார்.
Rate this:
Cancel
17-அக்-202116:03:25 IST Report Abuse
Arunagiri Sundharamurthy Please don't repeat the same comment
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X