அரசு பணியில் இருந்து பிரிவினைவாத தலைவரின் பேரன் டிஸ்மிஸ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அரசு பணியில் இருந்து பிரிவினைவாத தலைவரின் பேரன் டிஸ்மிஸ்

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (17)
Share
ஸ்ரீநகர்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியின் பேரன் அனீஸ் உல் இஸ்லாம் அரசு பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.அவர் காஷ்மீர் யூனியன் பிரதேச அரசின் சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஷெர் ஐ காஷ்மீர் சர்வதேச கருத்தரங்கு மையம் (எஸ்.கே.ஐ.சி.சி.,) செயல்படுகிறது. இந்த மையமானது, ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின்
J&K, Separatist, SyedAliShahGeelani, Grandson, Sack, Government Job

ஸ்ரீநகர்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியின் பேரன் அனீஸ் உல் இஸ்லாம் அரசு பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

அவர் காஷ்மீர் யூனியன் பிரதேச அரசின் சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஷெர் ஐ காஷ்மீர் சர்வதேச கருத்தரங்கு மையம் (எஸ்.கே.ஐ.சி.சி.,) செயல்படுகிறது. இந்த மையமானது, ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் முக்கியமான கருத்தரங்கம் மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்தும் உயர்மட்ட அமைப்பாகும். இந்த அமைப்புதான், வி.வி.ஐ.பி.,க்களுடன் கருத்தரங்கம் மற்றும் உயர் மட்ட கூட்டங்களை நடத்துகிறது. இந்த மையத்தில், ஆராய்ச்சி பிரிவு அதிகாரியாக, கிலானியின் பேரனான அனீஸ் உல் இஸ்லாமை, கடந்த 2016ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த மெகபூபா முப்தி நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறுகையில், அரசு பணியில் நியமனம் செய்யப்படும் சில மாதங்களுக்கு முன்னர் அனீஸ், பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். அவரை நியமிக்க வேண்டும் என அரசின் மேல்மட்டத்தில் இருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பணி நியமன விதிமுறைகள் மீறப்பட்டன. ஸ்ரீநகரில் நடக்கும் போராட்டங்களை டுரோன் மூலம் படம் பிடிக்க சிலருக்கு அவர் உதவியும் செய்துள்ளதாக தெரிகிறது. அதன் மூலம் போராட்டங்கள் குறித்த தகவல்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு சென்றுள்ளது.


latest tamil newsஅவரது நியமனத்தில் கடுமையான முறையில் முறைகேடு நடந்துள்ளது. பயங்கரவாதி புர்ஹான்வானி கொல்லப்பட்ட பின்னர் அங்கு ஏற்பட்ட வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, அனீசுக்கு கெசட்டட் பிரிவுக்கு இணையான பதவி வழங்குவது என கிலானிக்கும், முப்திக்கும் ஒப்பந்தம் போடப்பட்டதாக சந்தேகம் உள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு முதல் காலியாக இருந்த அந்த பதவியை நிரப்புவதற்கு எந்த அவசரமும் இல்லை. ஆனால், அனீஸ் பாகிஸ்தான் சென்று வந்த பின்னர், எஸ்.கே.ஐ.சி.சி.,யில் காலி பணியிடம் உள்ளதா? என திடீரென அதிகாரிகள் அவசர கதியில் ஆய்வு செய்தனர். அவசர கதியில், அவருக்கு பாதுகாப்பு உத்தரவாதம் குறித்த சான்றிதழும் வழங்கப்பட்டது. அவர் சந்தேகத்திற்கு உரிய வகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, நாடுகளை சேர்ந்த 3 பேருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X