அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., நிர்வாகிகளுக்கான அதிகாரங்களில் மாற்றம்

Added : அக் 17, 2021
Share
Advertisement
சென்னை : பா.ம.க., மாநில துணை பொதுசெயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகிய பதவிக்களுக்கான அதிகாரங்களில், மாற்றங்கள் செய்து, அக்கட்சியின் சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில், நேற்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம், இணையதளம் வாயிலாக, நேற்று நடந்தது. அக்கூடத்திற்கு மாநில தலைவர் ஜி.கே மணி தலைமை வகித்தார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி மாநில தலைவர்


சென்னை : பா.ம.க., மாநில துணை பொதுசெயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகிய பதவிக்களுக்கான அதிகாரங்களில், மாற்றங்கள் செய்து, அக்கட்சியின் சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில், நேற்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம், இணையதளம் வாயிலாக, நேற்று நடந்தது. அக்கூடத்திற்கு மாநில தலைவர் ஜி.கே மணி தலைமை வகித்தார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி மாநில தலைவர் அன்புமணி ஆகியோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:
மக்களுக்காக உழைக்க கூடியவர்கள், கட்சியின்முக்கிய பொறுப்பாளராக, நியமிக்கப்படுவர்.கட்சியின் நிர்வாக அமைப்புகளில், மாற்றங்கள் செய்யப்படும்.தலைமை, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும். மக்கள் பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்தப்படும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான உதவிகள் செயல்படுத்தப்படும்.இதற்கான செயல் திட்டங்களை ராமதாஸ் உருவாக்கி வைத்திருக்கிறார்.

பல்வேறு பணிக்குழுகளை அமைத்து, அந்த திட்டங்களை செயல்படுத்த, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு, பா.ம.க., வலுப்படுத்துவதற்கான, அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும்.ராமதாஸ், அன்புமணி ஆகியோர் காட்டும் வழியில் கடுமையாக உழைக்க வேண்டும். மாநில துணை பொதுசெயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகிய பதவிகளுக்கான அதிகாரங்களில், சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்தில், ஒரு துணை பொது செயலர், மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றனர்.இனி, மாவட்ட அளவில், மாநில துணை பொது செயலாளர் பதவி கைவிடப்படுகிறது. இனி கட்சி ரீதியில், மாவட்ட அமைப்பு, மாவட்ட செயலாளரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும். இந்த மாற்றத்தின் படி, மாவட்ட செயலாளர், புதிய பட்டியலை கட்சி, விரைவில் அறிவிக்கும்.

இவ்வாறு, பொதுக் குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X