பஞ்சாபில் மீண்டெழ கடைசி வாய்ப்பு: சோனியாவுக்கு சித்து கடிதம்

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாபில் மீண்டெழுவதற்கு தற்போது கடைசி வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும், வரும் சட்டசபை தேர்தல் அறிக்கையில், இடம்பெறும் 13 அம்சங்கள் குறித்து நேரில் ஆலோசிக்க நேரம் ஒதுக்கும்படி சோனியாவுக்கு அம்மாநில காங்., தலைவர் சித்து கடிதம் எழுதியுள்ளார்.பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்து அறிவித்தார். அவருடன்
sidhu, punjab, sonia, soniagandhi, congress,

சண்டிகர்: பஞ்சாபில் மீண்டெழுவதற்கு தற்போது கடைசி வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும், வரும் சட்டசபை தேர்தல் அறிக்கையில், இடம்பெறும் 13 அம்சங்கள் குறித்து நேரில் ஆலோசிக்க நேரம் ஒதுக்கும்படி சோனியாவுக்கு அம்மாநில காங்., தலைவர் சித்து கடிதம் எழுதியுள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்து அறிவித்தார். அவருடன் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் கட்சி மேலிட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு, ராகுலை சந்தித்து பேசிய சித்து, ராஜினாமாவை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அதற்கு முன் கடந்த 15ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் சித்து கூறியுள்ளதாவது: பஞ்சாபில் மீண்டெழுவதற்கான கடைசி வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் நாட்டின் பணக்கார மாநிலமாக திகழ்ந்த பஞ்சாப், தற்போது அதிக கடன் சுமை கொண்டதாக மாறியுள்ளது. தற்போது, ஒரு லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அவற்றை நிரப்புவதற்கு தேவையான அளவு நிதிநிலை இல்லை.

குருகிராந்த் சாகிப் கொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளிகளுக்கும் மற்றும் , பெபல் கலன் மற்றும் கோட்காபூர் துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்களுக்கும் தண்டனை வழங்கி, பஞ்சாபின் ஆன்மாவிற்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். போதை மருந்து கடத்தலில் முக்கிய குற்றவாளியை கைது செய்ய வேண்டும். மதத்தை அவமதித்த விவகாரம், போதைப்பொருள் விவகாரம், வேளாண் பிரச்னைகள், வேலைவாய்ப்பு, மணல் கொள்ளை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான திட்டங்கள், மின்சாரம், போக்குவரத்து நெருக்கடி, குறைந்த விலையில் மின்சாரம் ஆகியவை குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரங்கள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு உத்தரவிட வேண்டும்.


latest tamil news


விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையில் இடம்பெற உள்ள 13 அம்சங்கள் குறித்து நேரில் ஆலோசனை நடத்த வேண்டும். இதற்காக நேரம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் சித்து தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
17-அக்-202122:52:45 IST Report Abuse
Vijay D Ratnam 2014 லேர்ந்து அடி மேல அடி வாங்கி குற்றுயிரும் குலையுயிருமாக நோஞ்சானாக இருந்த கான்க்ராஸை, 56 இன்ச் மார்பு ஆளுகிட்ட மோதவிட்டு, அந்தாளு போட்டு பொளந்ததுல பேச்சு மூச்சே இல்லாமல் ஐசியூக்கு வந்து சேர்ந்தது. 2021 ல ஐசியுலேர்ந்து கோதாவில் இறங்கி அந்தாளு சாவு அடி அடித்து நொறுக்கி மார்ச்சுவரி அனுப்பிட்டார். மார்ச்சுவரியில் இருக்கும் கான்க்ராஸை ஐ.சி.யு க்கு அனுப்பி என்ன பிரயோஜனம். புதைப்பதா எரிப்பதா என்று சொல்லு சிங்கு. கருமாதி முடிச்சிட்டு கறிசோறு சாப்ட்டு போக கட்சிக்காரனுங்க காத்திட்டு இருக்காய்ங்கல்ல.
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
17-அக்-202120:35:12 IST Report Abuse
Nagercoil Suresh ஜோக்கர்...
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-அக்-202120:17:32 IST Report Abuse
A.George Alphonse முதலில் சித்துவை காங்கிரசில் இருந்து நீக்கினால் மட்டுமே பஞ்சாபில் காங்கிரஸ் மீட்டெழும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X