பொது செய்தி

இந்தியா

எரிபொருள் கொள்முதல்: இந்தியாவிடம் கடன் கேட்கும் இலங்கை

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
கொழும்பு: ‛‛கொள்முதல் செய்த கச்சா எண்ணெய்க்கான பாக்கியை செலுத்த 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க வேண்டும்,'' என இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.நமது அண்டை நாடான இலங்கை, கோவிட் பெருந்தொற்று காரணமாக, கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதனால், எரிபொருள் கொள்முதல் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளன.தற்போது,மத்திய கிழக்கில் இருந்து
INDIA, SRILANKA, FUEL, இந்தியா, இலங்கை, எரிபொருள், கடன்

கொழும்பு: ‛‛கொள்முதல் செய்த கச்சா எண்ணெய்க்கான பாக்கியை செலுத்த 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்க வேண்டும்,'' என இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

நமது அண்டை நாடான இலங்கை, கோவிட் பெருந்தொற்று காரணமாக, கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதனால், எரிபொருள் கொள்முதல் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளன.

தற்போது,மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெயையும், சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இறக்குமதிக்கு கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகின. எரிபொருள் இறக்குமதி செய்ய கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் கூடுதலாக 41.5 சதவீதம் தொகை செலவிடப்பட்டது. இதன் காரணமாக, எரிபொருள் விலை உயர்த்த ஆலோசனை கூறப்பட்ட நிலையில், கடந்த வாரம் சமையல் காஸ் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது. இதனால், விலை உயர்வு முடிவு ரத்தாகியது.


latest tamil newsஎரிபொருள் கொள்முதல் செய்யும், அந்நாட்டின் பொதுத்துறை நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்பரேசன் (சி.பி.சி.,) நிறுவனம் அரசு வங்கிகளான, சிலோன் வங்கி மற்றும் மக்கள் வங்கியில் 3.3 பில்லியன் டாலர் பாக்கி வைத்துள்ளது. ஜனவரி மாதம் வரை மட்டுமே, நாட்டில் எரிபொருளுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் உதயா கம்மன்பிலா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சி.பி.சி., தலைவர் சுமித் விஜிஷிங்கே கூறுகையில், இந்தியா - இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின்படி 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்குவது தொடர்பாக இங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதன் மூலம் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்ய பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.

அந்நாட்டு நிதித்துறை செயலர் எஸ்.ஆர்.அடிகலே கூறுகையில், கடன் தொடர்பாக, விரைவில் இந்தியா- இலங்கை எரிசக்தி துறை செயலர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-அக்-202109:56:57 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
18-அக்-202106:35:17 IST Report Abuse
Palanisamy T @ Ramachandran - உண்மையைச் சொல்லியுள்ளீர்கள். ஆனால் மத்திய அரசு கேட்குமா தராசை வைத்து நிறுத்துப் பார்த்தால் தமிழர்களின் நலனை விட இலங்கை ஆட்சியாளர்களின் மற்றும் பெரும்பான்மையான மக்களின் நலனே மத்திய அரசுக்கு முக்கியம். பூகோள அமைப்பில் இந்தியாவின் பாதுகாப்பை வைத்து நிறுத்துப் பார்த்தால் அதுதான் உண்மை. ஆகையால் மறந்து விடுங்கள். ஒப்பந்தம் நிச்சயம் நடக்கும். முன்பு போர் நடந்த நேரத்தில் இந்தியா இலங்கை ஈழத் தமிழர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பாக செயல்பட்டார்கள் என்பதையும் ஐநா மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக எவ்வளவு வேகமாக செயல் பட்டார்கள் என்பதை நாமெல்லாம் அறிந்ததுதான். மோடியைப் பற்றிச் சொன்னால் அவர் நியாயமாக நடப்பாரா என்பது இன்னும் கேள்விக் குறிதான். பாஜக வை பொறுத்த வரையில் தமிழக மக்களின் உணர்வுகளை விட நலனை விட தமிழகத்தை எப்படியாவது கைப்பற்றுவதே முக்கியம்
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
17-அக்-202120:53:14 IST Report Abuse
Srivilliputtur S Ramesh நமது இந்திய தனியார் துறைகளை அங்கே நேரடியாக இறக்கி விட்டால், அவர்கள் புகுந்து விளையாடுவார்கள். .. அவர்களுக்கும் சர்வ தேச வர்த்தகத்தில் ஒரு நல்ல வாய்ப்பு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X