பொது செய்தி

இந்தியா

கேரளாவிற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்: அமித்ஷா

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்,'' என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.இது தொடர்பாக அமித்ஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கேரளாவிற்கு சாத்தியமான
கேரளா, கனமழை, நிலச்சரிவு, மக்கள் பாதிப்பு, மத்தியஅரசு உதவிகள், உள்துறை அமைச்சர் உறுதி,

புதுடில்லி: ‛‛மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்,'' என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக அமித்ஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கேரளாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம். மீட்பு நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு ஏற்கனவே கேரளா விரைந்துள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




latest tamil news


கேரளாவின் தென்கிழக்கு அரபி கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காதிருக்க கேரள அரசு அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சபரிமலைக்கு இரண்டு நாட்களுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கௌடில்யன் - Chennai ,இந்தியா
18-அக்-202106:21:38 IST Report Abuse
கௌடில்யன் கேரளாவில் பெரும்பாலானவர்கள் திரை கடல் ஓடியும் திரவியம் தேடியவர்கள் ..ஒவ்வொரு வீட்டை பார்த்தாலே கோடிகளில் இழைத்து வைத்திருப்பார்கள் ...கலியாணங்களில் கிலோ கணக்கில் தங்கம் ...ஹவுசிங் லோன் வாங்கும்போதே இயற்க்கையால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் ..மகாராஷ்டிராவில் மழை அதிகம் பெய்தால் விவசாயிகளுக்கு இழப்பீடு ..மழை பெய்யாவிட்டால் இழப்பீடு ...உத்திரகாண்ட இமாச்சலில் மலை சரிவு ,,அசாம் பெங்கால் பீகாரில் மழை வெள்ளம் ...தமிழ்நாட்டிலோ இலவச அரிசி ..இலவச மின்சாரம் ..தாலிக்கு தங்கம் ..எல்லாத்துக்கும் இழப்பீடு கொடுத்துகிட்டே வந்தா யார் கட்டிய வரியில் இழப்பீடு தருவது ...
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
18-அக்-202104:43:26 IST Report Abuse
Nepolian S உதவி இல்லை அது உங்களின் வேலை
Rate this:
Cancel
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
17-அக்-202119:35:33 IST Report Abuse
தமிழன் ஆமா நீங்கதான் செய்யணும் வரி மட்டும் வாங்குறீங்கல்ல? கேரளா இந்தியாலதானே இருக்கு. இல்லன்னு சொல்லிட்டா அவங்க பாத்துப்பாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X