கேரளா கனமழை மற்றும் நிலச்சரிவால் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் 19 பேர் வரை உயிரிழந்த நிலையில் ,உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.கேரளாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழை, வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் இடிந்த வீடுகள், நிலச்சரிவு ஏற்பட்ட

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் 19 பேர் வரை உயிரிழந்த நிலையில் ,உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.latest tamil news
கேரளாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழை, வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் இடிந்த வீடுகள், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படைகள் ஈடுபட்டு வருகின்றன.அங்குள்ள மழை வெள்ள நிலவரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
டுவிட்டரில் மோடி தெரிவித்துள்ளதாவது:


Spoke to Kerala CM Shri @vijayanpinarayi and discussed the situation in the wake of heavy rains and landslides in Kerala. Authorities are working on the ground to assist the injured and affected. I pray for everyone's safety and well-being.— Narendra Modi (@narendramodi) October 17, 2021


It is saddening that some people have lost their lives due to heavy rains and landslides in Kerala. Condolences to the bereaved families.— Narendra Modi (@narendramodi) October 17, 2021


கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரி குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் பேசினேன். அவர் அங்குள்ள நிலைமையை விவாதித்தார். காயமடைந்தவர்கள் மற்றும் துயரமடைந்தவர்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளது. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன். கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிலர் பலியானது துரதிருஷ்டவசமானது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கூறினார்.latest tamil news#WATCH | Kerala: Parts of the state continue to experience rainfall and wind. Visuals from Mundakayam-Koottickal in Kottayam district. pic.twitter.com/KOb0F9EYRG— ANI (@ANI) October 17, 2021

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-அக்-202123:40:36 IST Report Abuse
பாண்டியன் இந்த ராயி என்னக்ஙி சுவாமி ஐயப்பன் கிட்ட வெளயாட்ட ஆரம்பிச்சாரோ அன்னிக்கு தொடங்கினது சுவாமியின் ஆட்டம்
Rate this:
Cancel
17-அக்-202123:40:36 IST Report Abuse
பாண்டியன் சுவாமியின் ஆட்டம்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
17-அக்-202120:45:32 IST Report Abuse
M  Ramachandran சென்ற முறை நிலச் சரிவில் உயிர் இழந்தவர்கள் பெரும்பாலும் தமிழர்கள். அபோ அரசு கண்டு கொள்ளவில்லை. இது ஊடகங்களின் வழியாக வந்த செய்தி.இப்போ எப்படியோ?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X