கேரளாவில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வீடு: வைரலாகும் வீடியோ

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
கேரளா : கோட்டயம், முண்டகயம் பகுதியில் பெய்த கனமழையால் ஆற்றோடு வீடு அடித்துச் செல்லப்பட்டது. கேரளாவில் 19-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இடுக்கி, திருச்சூர் உட்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் கோட்டயத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.மேலும் கூட்டிக்கல் கிராமத்தில் பலப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட

கேரளா : கோட்டயம், முண்டகயம் பகுதியில் பெய்த கனமழையால் ஆற்றோடு வீடு அடித்துச் செல்லப்பட்டது. கேரளாவில் 19-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இடுக்கி, திருச்சூர் உட்பட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் கோட்டயத்தில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.latest tamil newsமேலும் கூட்டிக்கல் கிராமத்தில் பலப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 வீடுகள் அடித்து செல்லப்பட்டன.


latest tamil news
கோட்டயம் மாவட்டத்தில் மீட்பு பணிகளுக்காக ராணுவம் மற்றும் விமானப்படையினரின் உதவி நாடப்பட்டு உள்ளது. இதனால், ராணுவ குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். ஆற்றோடு அடித்துச்செல்லப்பட்ட வீட்டின் வீடியோ சமுகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


மேக வெடிப்பு காரணம்!

கேரளாவில் பெய்த கன மழை குறித்து கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் வளிமண்டல அறிவியல் துறை பேராசிரியர் அபிலாஷ் கூறியதாவது:
கோட்டயம் மற்றும் இடுக்கியில் இரண்டு மணி நேரத்தில் 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மேக வெடிப்பு ஏற்பட்டால் மட்டுமே இதுபோன்ற பெருமழை பொழிய வாய்ப்புள்ளது. கோட்டயம் மற்றும் இடுக்கியின் உயர்ந்த மலைப் பகுதியில் சிறிய அளவு மேக வெடிப்பு ஏற்பட்ட காரணத்தினால், பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22-அக்-202119:53:24 IST Report Abuse
NicoleThomson மனிதன் கட்டிய வீடு தண்ணீரின் வேகத்துக்கு தாங்காம , ஆனா அதற்க்கு பின்னால் இருக்கும் சிறுமரம் எவ்வளவு ஸ்ட்ராங்கா கெட்தா நிக்குது , இயற்கையை உணருங்கடா என்று பாடம் எடுக்குதா?
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
19-அக்-202112:18:50 IST Report Abuse
Krishnamurthy Venkatesan நதி நீர் இணைப்பை மேற்கொள்ளாத வரையில் வெள்ளத்தால் சேதம், வரட்ச்சியால் பாதிப்பு என்று அனுபவிக்கத்தான் வேண்டும்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
18-அக்-202116:35:59 IST Report Abuse
DVRR இதில் எனக்கு ஒன்று எப்போதும் புரியவில்லை . 1) ரசாயன / சாயத்தொழிற்சாலை அருகில் வசித்தால் தண்ணீர் ரசாயனம் / சாயம் கலந்து அதாவது சுத்தமான நீர் கிடைப்பது குதிரை கொம்பு. 2) பட்டாசு தொழில் நடக்கும் இடத்தில் வெகு அருகில் வீடு இருந்தால் எப்போது அதுவும் வெடித்து சிதறும் என்று தெரியாது 3) நதி / கடல் / குளம் மிக மிக அருகில் (குறைந்தது அங்கிருந்து 300 மீட்டர் தள்ளி தான் வீடு இருக்கவேண்டும்) அதாவது 1 மீட்டர் தூரத்தில் வீடு கட்டுதல் வீடு வெள்ளத்தில் மிதந்தது வீட்டில் ஆற்று வெள்ளம் .....இப்படி டப்பா அடிப்பது ஏன்??? தெரிந்தே செய்யும் தவறு இது. அது எப்படி எல்லா வருடமும் 365 நாளும் இப்படித்தான் ஆகுமா கேள்வி மட்டும் கேட்கும் இந்த கூட்டம்??கொஞ்சமாவது ஒழுங்கு எண்ணத்தில் செயலில் இருந்தால் இந்த அனாவசிய கஷ்டம் தவிர்க்கப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X