இதுதான் கடைசி வாய்ப்பு சோனியாவுக்கு சித்து கடிதம்| Dinamalar

இதுதான் கடைசி வாய்ப்பு சோனியாவுக்கு சித்து கடிதம்

Updated : அக் 19, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (5)
Share
புதுடில்லி:பஞ்சாபில் போதை பொருள் வழக்கில் கைது நடவடிக்கை எடுப்பது, விவசாய உட்கட்டமைப்பை உருவாக்குவது, 'கேபிள்' மாபியாக்களை ஒடுக்க சட்டம் இயற்றுவது உட்பட, 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, காங்., தலைவர் சோனியாவுக்கு நவ்ஜோத் சிங் சித்து கடிதம் எழுதி உள்ளார். அதில், 'கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, இதுதான் நமக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு' என, அவர்
 இதுதான் ,கடைசி, வாய்ப்பு,சோனியாவுக்கு,சித்து,கடிதம்

புதுடில்லி:பஞ்சாபில் போதை பொருள் வழக்கில் கைது நடவடிக்கை எடுப்பது, விவசாய உட்கட்டமைப்பை உருவாக்குவது, 'கேபிள்' மாபியாக்களை ஒடுக்க சட்டம் இயற்றுவது உட்பட, 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, காங்., தலைவர் சோனியாவுக்கு நவ்ஜோத் சிங் சித்து கடிதம் எழுதி உள்ளார்.

அதில், 'கட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, இதுதான் நமக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு' என, அவர் தெரிவித்துள்ளார்.


ராஜினாமா

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் காங்.,கில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்றார்.

புதிய அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பட்டியலில் அதிருப்தி ஏற்பட்டதை அடுத்து, மாநில காங்., தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார்.காங்., - எம்.பி., ராகுல் மற்றும் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபாலை சந்தித்த பின், சித்து தன் ராஜினாமாவை திரும்ப பெற்றார்.அதன் பின், காங்., தலைவர் சோனியாவுக்கு 13 அம்ச கோரிக்கைகள் உடைய கடிதத்தை சித்து அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தின் நகலை தன், 'டுவிட்டர்' சமூகவலைதள பக்கத்தில் சித்து பகிர்ந்துள்ளார். அதன் விபரம்:நாட்டின் பணக்கார மாநிலமாக விளங்கிய பஞ்சாப், தற்போது கடுமையான கடனில் சிக்கி தவிக்கிறது.


நடவடிக்கை

சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.குரு கிரந்த சாஹிப் புனித நுால் திருடப்பட்ட வழக்கு, போதை பொருள் விவகாரம், விவசாயிகள் பிரச்னை, கேபிள் மாபியா, வேலையில்லா திண்டாட்டம், மணல் திருட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலன், மின்சாரம் மற்றும் போக்குவரத்தில் மக்கள்சந்திக்கும் பிரச்னைகளுக்கு முடிவுகட்ட வேண்டும்.இவற்றை பரிசீலித்து, எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கை குறித்து மாநில அரசுக்கு தலைமை உத்தரவிட வேண்டும்.

இது பஞ்சாபின் மறுமலர்ச்சிக்கும், மீட்சிக்கும் கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு. நம் மீதான அவப் பெயரை போக்க நமக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாகவும் கருத வேண்டும்.இது குறித்து, தலைவர் சோனியாவை நேரில் சந்தித்து விளக்கவும் தயாராக இருக்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X