மோடி அரசு நியமித்த குண்டர்கள்போல நடந்துகொள்ளும் மத்திய புலனாய்வு அமைப்புகள்: சஞ்ஜய் ராவத்| Dinamalar

மோடி அரசு நியமித்த குண்டர்கள்போல நடந்துகொள்ளும் மத்திய புலனாய்வு அமைப்புகள்': சஞ்ஜய் ராவத்

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (11)
Share
மும்பை: சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தொடர்ந்து மத்திய பாஜ., அரசை விமர்சித்து வருகிறார். தற்போது மத்திய புலனாய்வு அமைப்புகளை விமர்சித்துள்ள அவர், இந்த அமைப்புகள் மத்திய அரசின் அடியாட்கள்போல நடந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அரசியல் எதிரிகளை எதிர்கொள்ள மத்திய அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளை அடியாட்கள்போல பயன்படுத்தி வருவதாக சஞ்சய்

மும்பை: சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தொடர்ந்து மத்திய பாஜ., அரசை விமர்சித்து வருகிறார். தற்போது மத்திய புலனாய்வு அமைப்புகளை விமர்சித்துள்ள அவர், இந்த அமைப்புகள் மத்திய அரசின் அடியாட்கள்போல நடந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.



latest tamil news




மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அரசியல் எதிரிகளை எதிர்கொள்ள மத்திய அரசு மத்திய புலனாய்வு அமைப்புகளை அடியாட்கள்போல பயன்படுத்தி வருவதாக சஞ்சய் ராவத் பத்திரிகையாளர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசு துறைகளை திட்டமிட்டு ஆட்களை கொலை செய்யும் கூலி அடியாட்கள்போல மோடி அரசு பயன்படுத்தி வருவதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் திடீரென வருமான வரி சோதனை நடத்த ஏதேனும் சட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய சஞ்சய் ராவத் வருமான வரித்துறை மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவு சோதனை இட்ட நிலையில் இதனை சாதனை புத்தகத்தில் பதிவிடலாம் என்று கிண்டலாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் சஞ்சய் ராவத் கட்டுரை ஒன்றையும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. மூலதனம் இல்லாத ஓர் சிறந்த தொழிலாக தற்போது வருமான வரித்துறை சோதனை திகழ்ந்து கொண்டிருக்கிறது எனக் கூறிய அவர், மக்களின் பணத்தைக் கொண்டு அரசியல் எதிரிகளை பழிவாங்க மத்திய பாஜ., அரசு வருமான வரி சோதனை ஆயுதமாக கையில் எடுக்கிறது என்றுள்ளார்.

முன்னதாக மகாராஷ்டிரா காங்கிரஸ் மாநில அமைச்சர் நவாப் மாலிக் மருமகன் சமீர் கான் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சமீர் கானிடம் போதைப்பொருள் கைப்பற்றப்படாத சூழலில் என்சிபி அவரை கைது செய்துள்ளது.


latest tamil news




சமீர் கான் என்சிபி அதிகாரிகள்மீது இதற்காக வழக்கு தொடர வேண்டும் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார். முன்னாள் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வீட்டில் முன்னதாக சிபிஐ சோதனை நடத்தப்பட்டது குறித்தும் அவர் விமர்சித்தார்.

இதேபோல அஜித் பவார் வீட்டிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நிதி கணக்கில் செலுத்தப்படும் நிதி விவரங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினால் மத்திய அரசு இதுபோல ரெய்டு நடத்தி அச்சுறுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X