'ட்ரோன்' வாயிலாக ஆயுத வினியோகம்: காஷ்மீரில் வன்முறை அதிகரிக்க காரணம் இதுதான்

Updated : அக் 19, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:எல்லையில் அதிகரித்துள்ள ஊடுருவல்கள், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக ஆயுதங்கள் வினியோகிப்பது போன்றவை, ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில தினங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வெளிமாநில வியாபாரிகள்
 'ட்ரோன்' வாயிலாக ஆயுத வினியோகம்: காஷ்மீரில் வன்முறை அதிகரிக்க காரணம் இதுதான்

புதுடில்லி:எல்லையில் அதிகரித்துள்ள ஊடுருவல்கள், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக ஆயுதங்கள் வினியோகிப்பது போன்றவை, ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில தினங்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வெளிமாநில வியாபாரிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் பீஹாரைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி அரவிந்த் குமார் ஷா, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தச்சரான சகீர் அஹமது ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து பாதுகாப்பு படையினர் கூறியுள்ளதாவது:ஜம்மு - காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பாக்.,கைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் நிர்வாகத்துக்கு வருவாய் கிடைப்பதை தடுக்கவே, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை சுட்டுக் கொன்று வருகின்றனர்.

அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் பயங்கரவாதிகள் கவலைப்படுவதில்லை. இந்த வன்முறை சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளதற்கு மிக முக்கிய காரணம், எல்லையில் நடந்து வரும் ஊடுருவல்களே. கடந்த ஆகஸ்டில் இது துவங்கியது. இதைத் தவிர உள்ளூரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு, ட்ரோன் வாயிலாக ஆயுதங்களை வினியோகித்து வருகின்றனர். எல்லையில் தீவிர கண்காணிப்பில் இருந்தாலும் பாதுகாப்பு படையினரால் இவற்றை தடுக்க முடியவில்லை.

இதை தடுக்கும் வகையில் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கிடையே ஜம்மு அருகேயுள்ள மெமந்தார் வனப் பகுதியில், ஒரு பெண், அவரது மகன் மற்றும் ஒரு நபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் பாதுகாப்பு படையினர் ஒன்பது பேர் உயிரிழக்க காரணமான பயங்கரவாதிகளின்தாக்குதலுக்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


அழிக்கும் வசதி

ஜம்மு விமானப் படை தளத்தில் கடந்த ஜூன் 27ம் தேதி ட்ரோன் வாயிலாக குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் உள்ள விமானப் படை தளங்களில் ட்ரோன்களை அழிக்கக் கூடிய வசதி அமைக்கப்பட்டுள்ளதாக, என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.


கிலானியின் பேரன் நீக்கம்

சமீபத்தில் உயிரிழந்த ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான சையது அலி ஷா கிலானியின் பேரன் அனீஸ் அல் அஸ்லாம், அரசு வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.ஜம்மு - காஷ்மீர் சுற்றுலா துறையின் ஷேரி காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தின் ஆராய்ச்சி அதிகாரியாக, 2016ல் அவர் நியமிக்கப்பட்டார். இந்த பணி நியமனத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


2 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை

ஜம்மு - காஷ்மீரில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைத் தேர்ந்தெடுத்து பயங்கரவாதிகள் கொலை செய்யும் நிகழ்வுகள் தொடர்கின்றன.நேற்று முன்தினம் நடந்த இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், குல்காம் மாவட்டம் வான்போ பகுதியில், பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இதில் இரண்டு வெளிமாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; ஒருவர் காயமடைந்தார். இவர்கள் பீஹாரைச் சேர்ந்தவர்கள் என, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.கடந்த இரண்டு நாட்களில், மூன்று இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது, வெளிமாநில தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஐ.ஜி., உத்தரவு

ஜம்மு - காஷ்மீர் ஐ.ஜி., விஜய குமார், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:உங்கள் மாவட்டங்களில் வேலை செய்யும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கோ, மத்திய துணை ராணுவப் படை அல்லது ராணுவ முகாம்களுக்கோ உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சிறிதும் அலட்சியம் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விமானப்படை தளபதி ஆய்வுஇந்திய விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி காஷ்மீரின் லே பகுதிகயில் உள்ள விமானப் படைதளத்துக்கு வந்தார். அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள சக அதிகாரிகள் மற்றும் வீீரர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
18-அக்-202106:27:13 IST Report Abuse
Ravichandran Narayanaswamy பாக்கிஸ்தான் dh
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-அக்-202106:09:08 IST Report Abuse
Kasimani Baskaran ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்பது தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X