அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் சசிகலா கல்வெட்டால் சர்ச்சை! : குட்டையை குழப்பி ஆதாயம் பெறும் முயற்சி துவக்கம்

Updated : அக் 18, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (23+ 31)
Share
Advertisement
சென்னை:சென்னை தியாகராய நகரில் உள்ள, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்திற்கு நேற்று சசிகலா சென்றார். அங்குள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்ததுடன், அ.தி.மு.க., கொடியையும் ஏற்றி வைத்தார். அத்துடன், 'பொதுச்செயலர் சசிகலா' என பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியை பறிகொடுத்த அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி
எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் சசிகலா கல்வெட்டால்  சர்ச்சை! : குட்டையை குழப்பி ஆதாயம் பெறும் முயற்சி துவக்கம்

சென்னை:சென்னை தியாகராய நகரில் உள்ள, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்திற்கு நேற்று சசிகலா சென்றார். அங்குள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்ததுடன், அ.தி.மு.க., கொடியையும் ஏற்றி வைத்தார். அத்துடன், 'பொதுச்செயலர் சசிகலா' என பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியை பறிகொடுத்த அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி அடைந்துள்ள நேரத்தில், குட்டையை குழப்பி ஆதாயம் பெறும் முயற்சியை சசிகலா துவக்கி உள்ளார். 'கல்வெட்டில் பதித்ததால், சசிகலாவால் பொதுச் செயலராக முடியாது' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆவேசத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க.,வின் பொன் விழா ஆண்டு கொண்டாடம் நேற்று துவங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலைகளுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அவர்கள் இருவரும் அ.தி.மு.க., கொடியை ஏற்றி வைத்து, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். 'மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள்' என்றபொன் விழா சிறப்பு மலரும், அ.தி.மு.க., - ஐ.டி., அணி சார்பில் தயாரிக்கப்பட்ட பொன் விழா பாடலும் வெளியிடப்பட்டன.பின், பழனிசாமியும், பன்னீர்செல்வமும், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினர்.


சசிகலா கல்வெட்டு

அதேநேரத்தில், சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்திற்கு, ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்றார். அங்குள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், அ.தி.மு.க., கொடியை ஏற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில், 'அ.தி.மு.க., பொன் விழா கொண்டாட்டம் துவக்க விழா; பொதுச் செயலர் சசிகலா' என்று பொறிக்கப்பட்டிருந்தது. இது, அ.தி.மு.க., வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., வீட்டிற்கு சென்ற சசிகலா, அங்கு எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது, சசிகலா பேசியதாவது:

நமக்குள் ஏற்பட்ட பிரிவுகள் தான், நம் எதிரிகளுக்கு இடம் கொடுத்து விட்டன. அ.தி.மு.க., விற்காக, தொண்டர்களுக்காக, மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, மக்களின் பேராதரவோடு அ.தி.மு.க., ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். நாம் ஒன்றாக வேண்டும்; அ.தி.மு.க., வென்றாக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

சட்டசபை தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்த அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த நேரத்தில் குட்டையை குழப்பி ஆதாயம் பெறும் முயற்சியில் சசிகலா ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'கல்வெட்டில் பெயர் பொறித்தால், சகிகலா பொதுச் செயலராகி விட முடியாது' என, ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி:கல்வெட்டில் அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா என குறிப்பிடப்பட்டு உள்ளது நீதிமன்றத்தின் கண்டனத்திற்குரியது. எங்களுக்கு தான் இரட்டை இலை; நாங்கள் தான் கட்சி என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது. எல்லாரும் ஒற்றுமையாக இருக்கும் நிலையில், ஒரு கல்வெட்டில் பெயர் போட்டால் பொதுச் செயலராக முடியுமா; செஞ்சி கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்காக முடியுமா; மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் ஆக முடியுமா; சசிகலா மீது சட்ட ரீதியாக கட்சி நடவடிக்கை எடுக்கும்.

சசிகலா எந்த ஒரு தியாகமும் செய்யவில்லை. பின்னர் எப்படி அவர் தியாகத் தலைவியாக முடியும்? தற்போது தியாகத் தலைவி என்பது போய் புரட்சி தாயாம். சசிகலா தன் குடும்பத்தை வாழ வைக்கும் புரட்சியை தான் செய்தார். இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.


'மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி'

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை:கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என நினைத்திருந்த நேரத்தில், எதிரணியினர் அமைத்த மெகா கூட்டணி, அள்ளி வீசிய சாத்தியமற்ற தேர்தல் வாக்குறுதிகளால், ஆட்சி நம்மை விட்டு கைநழுவி போய்விட்டது.

அ.தி.மு.க., தோன்றி, 49 ஆண்டுகள் நிறைவு பெற்று, 50-வது பொன் விழா ஆண்டு துவங்கும் பொன்னாளில், ஜெயலலிதா வகுத்து கொடுத்த பாதையில் பயணித்து, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி மலர, ஓயாது உழைப்போம் என நாம் அனைவரும் சூளுரைப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


சசிகலாவை புறக்கணித்தஎம்.ஜி.ஆர்., பேரன்

எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகியின் தம்பி மகள் சுதா. இவரது மகன் ராமச்சந்திரன். ஜூனியர் ராமச்சந்திரன் என அழைக்கப்படும் இவர், சினிமா நடிகர்; அ.தி.மு.க., மாணவரணி மாநில நிர்வாகியாகவும் உள்ளார். தற்போது, எம்.ஜி.ஆர்., வீட்டில் தங்கி உள்ளார்.ராமாபுரம் எம்.ஜி.ஆர்., வீட்டிற்கு சசிகலா வருகிறார் என்றதும், அவரை சந்திக்க ராமச்சந்திரன் விரும்பவில்லை. அங்கிருந்து, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த பொன் விழா கொண்டாட்டத்திற்கு சென்று விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (23+ 31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
18-அக்-202122:05:51 IST Report Abuse
Venkatakrishnan அணையும் விளக்குகள் பிரகாசிப்பது ஒன்றும் புதிதல்ல.... பிரகாசிக்கட்டும்
Rate this:
Cancel
Ketheesh Waran - Bangalore,இந்தியா
18-அக்-202115:52:07 IST Report Abuse
Ketheesh Waran அ.தி.மு.க. பொதுச்செயலர் சசிகலா என கல்வெட்டில் பொறிக்கப்பட்டது காலத்தின் கட்டாயமாகும் சசிகலா தலைமையில் அ.தி.மு.க. அணிதிரலாவிட்டால் அ.தி.மு.க. அழிவு நிதர்சனம். பழனிசாமி ஜெயக்குமார் போன்றோர் கட்சியைவிட்டு நீக்கப்படவேண்டும் இவர்களின் ஒரே நோட்கம் பழனிச்சாமியை முன்னிலைப்படுத்துவது தான்
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
18-அக்-202114:48:17 IST Report Abuse
Visu Iyer 'கல்வெட்டில் பதித்ததால், சசிகலாவால் பொதுச் செயலராக முடியாது'/// ஏற்கனவே இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.. நிலுவையில் உள்ள வழக்கை பற்றி விமர்சனம் செய்வது சட்டப்படி சரியில்லை என்பதை ஜெயக்குமார் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.. முடியாது என்று பத்திரிகை நிருபரிடம் பேசும் இவர் சசிகலா மீது வழக்கு பதிய சொல்லுங்கள் பார்க்கலாம்.. அதை இவர் செய்ய மாட்டார். அதிமுகவில் யாரும் செய்ய மாட்டார்கள்.. ஒரு சில காரணத்திற்க்காக சின்னமா அமைதியாக இருக்கிறார்.. இல்லை யென்றால் இது போன்றவர்களை விரட்டுவது அவருக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை என்பதை இவர்கள் இன்னமும் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் வேடிக்கை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X