அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோடிகள் கொடுத்தாலும் பாட்டாளிகள் இடது கையால் வீசி எறிவார்கள்: ராமதாஸ்

Updated : அக் 17, 2021 | Added : அக் 17, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: பா.ம.க.,வில் இருந்து மாவட்ட, மாநில நிர்வாகிகள் சிலர் தி.மு.க., பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு தாவி வரும் நிலையில், ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ பாட்டாளிகள் அனைவரும் சத்திரியர்கள். அவர்களுக்கு விலையாக கோடிகள் கொட்டப்பட்டால் கூட, அதை இடது கையால் வீசி எறிவார்கள்.” என கூறியுள்ளார்.ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் பா.ம.க., பொதுக் குழு

சென்னை: பா.ம.க.,வில் இருந்து மாவட்ட, மாநில நிர்வாகிகள் சிலர் தி.மு.க., பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு தாவி வரும் நிலையில், ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ பாட்டாளிகள் அனைவரும் சத்திரியர்கள். அவர்களுக்கு விலையாக கோடிகள் கொட்டப்பட்டால் கூட, அதை இடது கையால் வீசி எறிவார்கள்.” என கூறியுள்ளார்.latest tamil newsஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் பா.ம.க., பொதுக் குழு கூட்டம் நேற்று (அக்., 16) காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மிகவும் வருத்தமளிப்பதாக ராமதாஸ் கூறினார். வன்னியர்கள் ஓட்டு வங்கி அதிகம் உள்ள 7 மாவட்டங்களில் கூட பா.ம.க.,வுக்கு ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக காட்டமாக பேசியிருந்தார். தோல்விக்கு காரணமானவர்கள் எல்லாம் தண்டனைக்குரியவர்கள், காட்டிக்கொடுப்பவர்கள். பிள்ளைப் பிடிப்பவர்கள் ஊர் ஊராக சுற்றுகிறார்கள் அங்கே போய் விடுங்கள் என கூறியிருந்தார்.


பதவியை விட பாசம் முதன்மை!


இந்நிலையில் இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்தக் காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக தியாகங்களை செய்தவர்கள் லட்சக்கணக்கானவர்கள். அவர்கள் அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் என்பதைத் தவிர வேறு எந்த பதவியும் கிடைக்கவில்லை, பயனும் கிடைக்கவில்லை. ஆனாலும், அவர்கள் கவலைப்படவில்லை. காரணம், அவர்களுக்குத் தேவை பதவிகள் அல்ல முதன்மைப் பாட்டாளியான அய்யாவின் பாசம் தான்.


latest tamil news
விசுவாசம்!


பாட்டாளிகளுக்கு தனி மனித ஒழுக்கம், பண்பாடு, குடும்ப உறவு முறை உள்ளிட்ட அனைத்தையும் நான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் படிப்பதற்காகத் தான் 32 ஆண்டுகளுக்கு முன் எம்.பி.சி 20% இட ஒதுக்கீட்டையும், இப்போது 10.50% தனி இட ஒதுக்கீட்டையும் வென்றெடுத்துக் கொடுத்திருக்கிறேன். விசுவாசம் என்பதன் அர்த்தம் பாட்டாளிகளின் ரத்தத்திலும், மனதிலும் எழுதப்பட்டிருக்கிறது.
கொள்கை இல்லாத கூட்டங்களை அவர்கள் கால் தூசுக்குக் கூட மதிக்கமாட்டார்கள். பாட்டாளிகளை பறித்து விடலாம். தங்கள் முகாமுக்குக் கடத்திச் சென்று விடலாம் என்று பொய்யுரைப்பதையே பிழைப்பாகக் கொண்ட கூட்டம் நினைத்தால், அவர்களுக்கு ஆறாவது அறிவு வளரவில்லை என்று தான் அர்த்தம். என கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
24-அக்-202105:18:01 IST Report Abuse
meenakshisundaram என்ன ?வாங்கும் பொது 'வலது கையும் .வேணாங்கிறபோது இடது கையுமா ?
Rate this:
Cancel
18-அக்-202111:21:16 IST Report Abuse
அப்புசாமி இவுரு வீசி எறிய மாட்டாரு. ஏன்னா இவுரு பாட்டாளி அல்ல. பாட்டும் எழுதத் தெரியாதவர். பாடு படவும் தேவையில்லை.
Rate this:
Cancel
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
18-அக்-202110:03:56 IST Report Abuse
HONDA என்ன சொல்றிங்க ஏற்கனவே புல்லா வாங்கிட்டாங்க இப்ப தேவையில்லைன்னு சொல்றிங்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X