எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

குருசடை தீவு சுற்றுலா திட்டம் செயல்படுவது எப்போது: ராமநாதபுரம் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு

Added : அக் 17, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா திட்டத்தின் கீழ் குருசடை தீவு சுற்றுலா திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், எப்போதுசெயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.மன்னார் வளைகுடா கடலில் 21 குட்டி தீவுகள் உள்ளன. இந்த தீவுகளுக்கு கண்ணாடி இழை படகுகளில் சென்று கடல்வாழ் உயிரினங்களை கண்டு கழிக்கவும், தீவுகளை பார்த்து ரசிக்கவும் வனத்துறை சார்பில்
குருசடை தீவு சுற்றுலா திட்டம் செயல்படுவது  எப்போது: ராமநாதபுரம் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா திட்டத்தின் கீழ் குருசடை தீவு சுற்றுலா
திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், எப்போதுசெயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

மன்னார் வளைகுடா கடலில் 21 குட்டி தீவுகள் உள்ளன. இந்த தீவுகளுக்கு கண்ணாடி இழை
படகுகளில் சென்று கடல்வாழ் உயிரினங்களை கண்டு கழிக்கவும், தீவுகளை பார்த்து ரசிக்கவும் வனத்துறை சார்பில் 2019ல்திட்டம் தயாரிக்கப்பட்டது.இங்கு கடல்வாழ் அரிய உயிரினங்கள் அதிகம்வாழ்வதால் மன்னார் வளைகுடா கடல் பகுதியை பாதுகாக்க தேசிய கடல் பூங்கா செயல்படுத்தப்படுகிறது.

பாம்பன் பாலத்தில்இருந்து கடல் அழகையும் குட்டித்தீவுகளையும் ரசிக்கும் சுற்றுலாப்பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய அவர்களை தீவுகளுக்கு அழைத்து சென்று கடல்வாழ் உயிரினங்களை கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இங்குள்ள குருசடை தீவை மையமாக வைத்து, புள்ளிவாசல் தீவு, சிங்கிலிதீவு, பூமரிச்சான் தீவு ஆகிய நான்கு தீவுகள் மற்றும்
அதனை சுற்றியுள்ள பகுதிகள் சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்தன. இதற்கென எல்லைகள்வரையறுக்கப்பட்டு மிதவைகள் போடும் பணி துவங்கியது.

இதற்கென பாம்பன் குந்துகால் பகுதியில் ரூ.5 லட்சத்தில் படகு இறங்குதளம் அமைக்கப்பட்டது. ஒரு படகில் 20 பேரை குருசடை தீவில் இறக்கிவிட்டு அங்கிருந்து கண்ணாடி இழை படகில் மற்ற தீவுகளுக்கு அழைத்து செல்ல வசதியாக படகுகளும் வாங்கப்பட்டன.இதற்கென
ரூ.40 லட்சம் செலவிடப்பட்ட நிலையில், மீனவர்களின்எதிர்ப்பால் சுற்றுலா திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மீனவர்களுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உத்தரவாதம் அளித்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்பதே மாவட்ட மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் எதிர்பார்ப்பு.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundara Raman - bengaluru,இந்தியா
18-அக்-202119:22:34 IST Report Abuse
Sundara Raman மக்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. படகை வைத்து வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை மொட்டையடித்து ஏமாற்றி ஓட்டாண்டிகளாக மாற்றி அனுப்பிவைக்கும் உள்ளூர் ரவுடிகள் தான் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.................
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-அக்-202105:18:50 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இயற்கை பொத்திப் பாதுகாக்கும் அந்த இடத்தை இந்த அறிவு குன்றிய கூட்டத்துக்கு திறந்து விட்டால் பிளாஸ்டிக் குப்பை, சாப்பாடு தட்டு, பிளாஸ்டிக் கப், சரக்கு பாட்டில்கள் என்று ஏகப்பட்ட குப்பைகளை போட்டு அசிங்கப்படுத்தி - சொல்லவே வேண்டாம். இப்ப கூட நீங்க தனுஷ்கோடிக்கு போகும் போது சாலையின் இருபக்கமும் பாதையை கவனியுங்கள். அந்த அழகிய மணல் திட்டுக்கள் நிறைந்த இடத்தில், ரோட்டின் இருமருங்கிலும் பிளாஸ்டிக் குப்பை மேடுகளை காணலாம்.. மனுஷன் கால்வெச்ச இடம் வெளங்கினதா சரித்திரத்தில் இல்லை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X