நீலகிரியில் பரவலாக மழை: தயார் நிலையில் மீட்பு குழு

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | |
Advertisement
ஊட்டி-நீலகிரியில் மழை தொடர்வதால், மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்கிறது.நேற்று முன்தினம் நள்ளிரவு பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது.அதிகபட்சம் பந்தலுாரில் 15 செ.மீ., தேவாலாவில் 8 செ..மீ., பதிவாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 456 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

ஊட்டி-நீலகிரியில் மழை தொடர்வதால், மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்கிறது.latest tamil news


நேற்று முன்தினம் நள்ளிரவு பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது.அதிகபட்சம் பந்தலுாரில் 15 செ.மீ., தேவாலாவில் 8 செ..மீ., பதிவாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 456 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாவில், பாதிப்பு இருந்தால், அந்தந்த பகுதி வருவாய் துறையை அணுகி முகாம்களில் தங்க வேண்டும். அவசர சமயங்களில் தொடர்பு கொள்ள, 1077 என்ற கட்டணம் இல்லாத எண்ணில் அழைக்க வேண்டும்,'' என்றார்.

தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் ஆர்னிஷா பிரியதர்ஷினி கூறுகையில், ''மாவட்டத்தில் இதுவரை பாதிப்பு ஏதும் இல்லை. தேவையான உபகரணங்களுடன், தயார் நிலையில் மீட்பு குழுவினர் உள்ளனர்,'' என்றார்.நிரம்பிய ஆழியாறுகோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு, பழைய ஆயக்கட்டு மற்றும் கேரளா பாசனத்துக்கு நீர் வழங்கப்படுகிறது.

அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நீர் வரத்து அதிகரித்து வருகிறது.நேற்று முன்தினம் மேல்ஆழியாறு அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டதால், அணையின் மொத்த உயரமான, 120 அடியில் 119.50 அடிக்கும் அதிகமாக நீர்மட்டம் உயர்ந்து அணை நிரம்பியது.அணையின் பாதுகாப்பு கருதி, மொத்தம் உள்ள 11 மதகுகள் வழியாக 2,020 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

குமரியில் குறைந்ததுகடந்த மூன்று நாட்களாக குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கோதையாறு, சிற்றாறு அணைகளில் இருந்து 32 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதனால், தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோரங்கள், நகரப் பகுதிகளில் போதிய வடிகால் வசதி இல்லாததால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.நேற்று காலை 10:00 மணிக்கு பின், மழை குறைந்து, வெயில் அடித்தது. அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் வெகுவாக குறைந்தது. இதனால், தண்ணீர் வடிய துவங்கியுள்ளது. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு, குறும்பனை மாணவர் நிஷான், 17; குழித்துறையில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த, சென்னை அம்பத்துார் மாணவர்ஜெபின், 17; கீரிப்பாறை தொழிலாளி சித்திரவேல், 46, ஆகியோர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.மேலும், ரப்பர் பால் வடிப்பு, செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.வாழை, ரப்பர், மரச்சீனி மற்றும் நடவு வயல்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.கேரளா விரைந்தது பேரிடர் மீட்பு படை கேரளா மாநிலத்தின் பல பகுதிகளில், கனமழை பெய்து வருகிறது.


latest tamil news


பல இடங்களில், நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கேரள அரசு கேட்டு கொண்டதன்படி ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து, 100 வீரர்கள், ரப்பர் படகுகள் உள்ளிட்ட பல்வேறு மீட்பு கருவிகளுடன் நேற்று கேரளா சென்றனர்.ஏற்கனவே, அரக்கோணத்தில் இருந்து ஒரு வாரத்திற்கு முன், ஆறு தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் கேரளா சென்றுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X