அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தை நாசம் செய்யும் மதுபானக் கொள்கை: எச்.ராஜா காட்டம்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
திண்டுக்கல் --'திராவிட கட்சிகளின் மதுபான கொள்கை தமிழகத்தை நாசம் செய்து வருகிறது' என, பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அவர் கூறியது: முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இரு குழந்தைகள் போதும் என்ற விளம்பரங்களே அதிகம். தற்போது செயற்கை கருத்தரிப்பு விளம்பர அதிகரிப்பு அவலத்திற்கு திராவிட கட்சிகளின் மதுபான

திண்டுக்கல் --'திராவிட கட்சிகளின் மதுபான கொள்கை தமிழகத்தை நாசம் செய்து வருகிறது' என, பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.



latest tamil news


திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அவர் கூறியது: முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இரு குழந்தைகள் போதும் என்ற விளம்பரங்களே அதிகம். தற்போது செயற்கை கருத்தரிப்பு விளம்பர அதிகரிப்பு அவலத்திற்கு திராவிட கட்சிகளின் மதுபான கொள்கையே காரணம். 1969க்கு பின் கருணாநிதி கொண்டு வந்த மதுபான விற்பனை தமிழினத்தை நாசம் செய்து வருகிறது.


latest tamil news


ஐந்து மாதங்களாக மணல் கொள்ளை தாராளமாக நடக்கிறது. தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட குடும்ப தலைவிக்கு ரூ.1000, பழைய பென்ஷன் திட்டம் கண்டு கொள்ளப்படாமல் உள்ளன. பஞ்சப்படி வழங்க நிதியில்லை என்கிறார் நிதியமைச்சர்.

மத்திய அரசின் இலவச தடுப்பூசி, ரேஷனில் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கும் திட்டங்கள் மட்டுமே வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளன. இவை இல்லையெனில் தமிழகத்தில் பட்டினிச்சாவு அதிகரித்திருக்கும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilReader - Dindigul,இந்தியா
18-அக்-202123:21:22 IST Report Abuse
TamilReader இந்த ராஜா ஏன் முதலில் புதுச்சேரி -இல் மதுவை ஒழித்துவிட்டு இங்கு வந்து பேசவும் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக காமெடி செய்து கொண்டு இருக்கிறார்
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
18-அக்-202122:11:34 IST Report Abuse
Venkatakrishnan கடந்த பத்து வருஷமா நீங்க அமெரிக்காவுல வசிச்சேளா? படிப்படியா மதுவிலக்கை அமல்படுத்துவோம்னு ஒரு ஊழல் மஹாராணி சொல்லி ஆறு வருசமா ஒரு புல் கூட அசையாலேயே... அப்பெல்லாம் ...?
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
18-அக்-202114:15:55 IST Report Abuse
Raj சாராயம் குடிப்பதால் உண்டாகும் மரணங்கள் தமிழகத்தில் அதிகம், அதனால் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகம் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் சொன்னதை நினைவு கொள்ளுதல் நமது மாநிலத்துக்கு நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X