தமிழகத்தை நாசம் செய்யும் மதுபானக் கொள்கை: எச்.ராஜா காட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தை நாசம் செய்யும் மதுபானக் கொள்கை: எச்.ராஜா காட்டம்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (28)
Share
திண்டுக்கல் --'திராவிட கட்சிகளின் மதுபான கொள்கை தமிழகத்தை நாசம் செய்து வருகிறது' என, பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அவர் கூறியது: முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இரு குழந்தைகள் போதும் என்ற விளம்பரங்களே அதிகம். தற்போது செயற்கை கருத்தரிப்பு விளம்பர அதிகரிப்பு அவலத்திற்கு திராவிட கட்சிகளின் மதுபான

திண்டுக்கல் --'திராவிட கட்சிகளின் மதுபான கொள்கை தமிழகத்தை நாசம் செய்து வருகிறது' என, பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.



latest tamil news


திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அவர் கூறியது: முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இரு குழந்தைகள் போதும் என்ற விளம்பரங்களே அதிகம். தற்போது செயற்கை கருத்தரிப்பு விளம்பர அதிகரிப்பு அவலத்திற்கு திராவிட கட்சிகளின் மதுபான கொள்கையே காரணம். 1969க்கு பின் கருணாநிதி கொண்டு வந்த மதுபான விற்பனை தமிழினத்தை நாசம் செய்து வருகிறது.


latest tamil news


ஐந்து மாதங்களாக மணல் கொள்ளை தாராளமாக நடக்கிறது. தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட குடும்ப தலைவிக்கு ரூ.1000, பழைய பென்ஷன் திட்டம் கண்டு கொள்ளப்படாமல் உள்ளன. பஞ்சப்படி வழங்க நிதியில்லை என்கிறார் நிதியமைச்சர்.

மத்திய அரசின் இலவச தடுப்பூசி, ரேஷனில் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கும் திட்டங்கள் மட்டுமே வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளன. இவை இல்லையெனில் தமிழகத்தில் பட்டினிச்சாவு அதிகரித்திருக்கும், என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X