பேரூராட்சிகளுக்கு தேர்தல்: ஆணையம் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சிகளுக்கு தேர்தல்: ஆணையம் ஆலோசனை

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021
Share
சென்னை-ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த ஒன்பது மாவட்டங்களில், பேரூராட்சி தேர்தல் நடத்துவது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.இந்த தேர்தலில்

சென்னை-ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த ஒன்பது மாவட்டங்களில், பேரூராட்சி தேர்தல் நடத்துவது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.



latest tamil news


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.இந்த தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது. மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 22ம் தேதி நடக்க உள்ளது.

இதற்கான பணிகள், அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகின்றன.ஊரக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய நிலையில், மாநில தேர்தல் ஆணையம் உள்ளது.பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகளாகவும்; பேரூராட்சிகள், நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.


latest tamil news


இவற்றில் வார்டு வரையறை செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே, பேரூராட்சி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் விரும்புகிறது. முதற்கட்டமாக, சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த ஒன்பது மாவட்டங்களில், பேரூராட்சி தேர்தலை, சூட்டோடு சூடாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் பேரூராட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இது குறித்து, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், செயலர் சுந்தரவல்லி உள்ளிட்ட அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது, ஒன்பது மாவட்ட மறைமுக தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, கலெக்டர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X