பொது செய்தி

தமிழ்நாடு

துறைகள் குறித்த புகார்கள் பதிவு செய்ய புதிய வசதி?

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை--பொதுமக்கள், அரசு துறைகள் தொடர்பான புகார்களை, மொபைல் போன் வாயிலாக பதிவு செய்ய, விரைவில் புதிய வசதி அறிமுகமாக உள்ளது.தமிழகத்தில் அரசின் சேவைகளை பெறுவதில் குறைபாடு இருந்தால், அது குறித்த புகார்களை பொது மக்கள் தெரிவிக்கலாம். துறைகள் ரீதியாகவும், மாவட்ட அளவிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இப்படி தெரிவிக்கப்படும் புகார்கள், யாரால் பணி

சென்னை--பொதுமக்கள், அரசு துறைகள் தொடர்பான புகார்களை, மொபைல் போன் வாயிலாக பதிவு செய்ய, விரைவில் புதிய வசதி அறிமுகமாக உள்ளது.



latest tamil news


தமிழகத்தில் அரசின் சேவைகளை பெறுவதில் குறைபாடு இருந்தால், அது குறித்த புகார்களை பொது மக்கள் தெரிவிக்கலாம். துறைகள் ரீதியாகவும், மாவட்ட அளவிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இப்படி தெரிவிக்கப்படும் புகார்கள், யாரால் பணி முடக்கப்படுகிறதோ; அவருக்கே செல்வதால், மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.இதில், மாவட்டங்களில் கலெக்டர் வாயிலாக மக்கள் புகார்கள் தெரிவிக்க, குறை தீர்ப்பு நாள் நடத்தப்படுகிறது.

இதில் நிவர்த்தி ஏற்படாத பிரச்னைகளை, முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல மக்கள் விரும்புகின்றனர். இதற்காக, முதல்வரின் தனிப் பிரிவில் புகார்கள் பெறப்படுகின்றன.இந்த புகார்கள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, முதல்வரின் தனிப் பிரிவில் இருந்து அனுப்பப்படுவதால், இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் எழுகிறது.இதில், 'ஆன்லைன்' முறையில் தான் மக்கள் விரிவாக புகார் அளிக்க முடிகிறது. இப்பிரிவுக்கான தரைவழி தொலைபேசி எண் வாயிலாக சந்தேகங்கள் மட்டுமே கேட்க முடிகிறது; புகார்களை பதிவு செய்ய முடிவதில்லை.

இந்நிலையில், கடந்த ஆட்சிக் காலத்தில் புகார்களை பெற, 1100 என்ற பிரத்யேக எண் ஒதுக்கப்பட்டது. தற்போது இந்த எண் இருந்தாலும், புகார்களை பதிவு செய்ய இயலவில்லை.இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் புகார்களை மொபைல் போன் வாயிலாக, எளிதாக பதிவு செய்ய சிறப்பு வசதியை ஏற்படுத்தும் பணிகளை, தமிழக அரசு துவக்கி உள்ளது. அரசின் பல்வேறு துறைகளின் புகார் பிரிவுகளை, 'சாப்ட்வேர்' வாயிலாக ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருகிறது.


latest tamil news


பொதுமக்கள் ஒரு புகாரை தெரிவித்தால், அது முதல்வரின் தனிப் பிரிவில் பதிவாகும்; அதே நேரம் சம்பந்தப்பட்ட துறையின் புகார் பிரிவிலும் பதிவாகும் வகையில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. புகார் தற்போது யாரிடம் உள்ளது என்பது உள்ளிட்ட விபரங்களை, வெளிப்படையாக மக்கள் தெரிந்து கொள்ள இதில் வாய்ப்புஅளிக்கப்படும்.தகவல் தொழில்நுட்ப துறை வாயிலாக, இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒதுக்கப்படும் தொடர்பு எண் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
18-அக்-202114:26:27 IST Report Abuse
R.RAMACHANDRAN மக்கள் குறைகளை தீர்த்து வைப்பதாகக் கூருவது என்பது மக்களை ஏமாற்றுவதாகும். மக்கள் அளிக்கும் மனுக்களை ஆதாயம் இல்லாமல் எந்த வேலையும் செய்யமாட்டோம் எனும் அரசு ஊழியர்கள் கூட்டம் மனுக்களை படிப்பதேயில்லை.லஞ்சம் கொடுப்பவர்கலுக்கு அவர்கள் அரசு சேவைகளை பெற தகுதியில்லை என்றாலும் பயனடைகிறார்கள்.
Rate this:
Cancel
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
18-அக்-202112:13:40 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் இயக்குனர்கள் ஆணையர்கள் ஆகியோரது மின் அஞ்சல் முகவரி சரியாகவே வெளியிடப்படவில்லை காரணம் என்னவோ தெரியவில்லை மனுக்கள் பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புகை அஞ்சல் கூட வருவதில்லை எம் பி க்கள் மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்படவில்லை அரசின் கவனத்திற்கு ஊடகங்கள் கொண்டு செல்லவேண்டும்
Rate this:
Cancel
VIJAYAKUMAR JAYABALAN - Bedok,சிங்கப்பூர்
18-அக்-202108:15:46 IST Report Abuse
VIJAYAKUMAR JAYABALAN உண்மையில் இது வரவேற்க தக்க வசதி.. தமிழ் நாட்டில் லட்சக்கணக்கான் மக்கள் குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்கள் வெகுவாக பயன் பெற்று வருகின்றனர். முதல்வருக்கும் அதை சார்ந்த துறைக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X