காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு மோகன் பாகவத் யோசனை

Added : அக் 18, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
நாக்பூர்-''சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பிரச்னைக்கு முழுமையாக தீர்வு ஏற்படவில்லை. விடுதலை கேட்பவர்களை, நம் நாட்டுடன் இணைக்க வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு

நாக்பூர்-''சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பிரச்னைக்கு முழுமையாக தீர்வு ஏற்படவில்லை. விடுதலை கேட்பவர்களை, நம் நாட்டுடன் இணைக்க வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.



latest tamil news



மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019ல் நீக்கப்பட்டது. இதனால் இந்தியாவுடன் அது முழுமையாக இணைந்துள்ளது. அங்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கு முன் மத்திய அரசு செலவிட்ட பெரும் தொகை, அங்குள்ள பிரிவினைவாதிகளுக்கே கிடைத்து வந்தது. தற்போது காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக சென்று சேர்கின்றன.மக்களும் பயங்கரவாதிகள் தொடர்பான அச்சத்தில் இருந்து மீண்டு வந்துள்ளனர். குழந்தைகளின் கைகளில் கற்களை கொடுத்தவர்கள், தற்போது புத்தகங்களை கொடுத்து வருகின்றனர்.


latest tamil news



இருந்தாலும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பிரச்னைகள் முழுமையாக தீரவில்லை. தடைகள் நீக்கப்பட்டதால், சற்று மெத்தனமும் ஏற்பட்டுள்ளது.தற்போதும் அங்குள்ள சிலர், 'ஆசாதி' எனப்படும் விடுதலை வேண்டும் என கேட்கின்றனர். அவர்களுடன் பேச வேண்டும். நாட்டுடன் முழுமையாக அவர்களை இணைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saba -  ( Posted via: Dinamalar Android App )
18-அக்-202117:12:15 IST Report Abuse
Saba PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
18-அக்-202115:23:38 IST Report Abuse
சம்பத் குமார் 1). முதலாவது காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு POK( Pakistan occupied Kashmir)யை இந்தியாவுடன் இணைக்க வேண்டும். அதுவே முதலாவதும் இறுதியான முடிவாக இருக்க முடியும்.2). POKவை நம்முடன் இணைத்து விட்டால் பாகிஸ்தான் நம்முடன் அவர்களுடைய் Orginal main landலிருந்து நமக்கு எதிரான வன்முறையை ஏவ முடியாது.3). ஏனெனில் அது சமவெளி.‌ அங்கு கோழைகள் போல் மறைந்து இருந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட முடியாது. 4). இராண்டாவது பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து போகும் ஆறுகளில் நமக்கு முழு உரிமை உள்ள Beas, Ravi, Sutlej நதிகளின் தண்ணீரை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.5) அதேபோல் மற்ற் மூன்று நதிகள் ஆகிய Indus, Chenab, Jhelum நதிகளில் நமக்கு 20 உரிமை உண்டு. 6). இந்த நதிகள் நமது பங்கிற்கு உண்டான தண்ணீரை முழுமையாக பயன்படுத்தினால் பாகிஸ்தான் உணவுக்கு சிரமம் பட வேண்டி இருக்கும்.7).காஷ்மீரில் தீவிரவாதம் பண்ண வேண்டாம் என்பதற்காக இதை நாம் பாகிஸ்தானுக்கு முதலில் உணர்த்த வேண்டும்.8). இல்லையெனில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 9). இது எல்லாம் கண்டிப்பாக நடைபெறும். என்ன ஒரு சிறிது காலம் அதாவது 2023 குள் நடைபெறும். அது வெற்றி அடைய இந்திய குடிமக்களாகிய நாம் பாராத தாயை போற்றி வணங்குவோம்.‌ நன்றி ஐயா. ஹரி ஓம்.
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
18-அக்-202109:27:05 IST Report Abuse
veeramani எந்த நிலையிலும் கஸ்மீரை விட்டுக்கொடுக்க முடியவேமுடியாது . ஒன்றுபட்ட இந்தியாவின் ஒரு மாநிலம்தான் காஷ்மீர். மீடியாக்களை சில செய்திகளையும் , படங்களையும் பிரசுரிக்கக்கூடாது என அறிவுறுத்தவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X