காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு மோகன் பாகவத் யோசனை| Dinamalar

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு மோகன் பாகவத் யோசனை

Added : அக் 18, 2021 | கருத்துகள் (11)
Share
நாக்பூர்-''சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பிரச்னைக்கு முழுமையாக தீர்வு ஏற்படவில்லை. விடுதலை கேட்பவர்களை, நம் நாட்டுடன் இணைக்க வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு

நாக்பூர்-''சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பிரச்னைக்கு முழுமையாக தீர்வு ஏற்படவில்லை. விடுதலை கேட்பவர்களை, நம் நாட்டுடன் இணைக்க வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.



latest tamil news



மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019ல் நீக்கப்பட்டது. இதனால் இந்தியாவுடன் அது முழுமையாக இணைந்துள்ளது. அங்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கு முன் மத்திய அரசு செலவிட்ட பெரும் தொகை, அங்குள்ள பிரிவினைவாதிகளுக்கே கிடைத்து வந்தது. தற்போது காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக சென்று சேர்கின்றன.மக்களும் பயங்கரவாதிகள் தொடர்பான அச்சத்தில் இருந்து மீண்டு வந்துள்ளனர். குழந்தைகளின் கைகளில் கற்களை கொடுத்தவர்கள், தற்போது புத்தகங்களை கொடுத்து வருகின்றனர்.


latest tamil news



இருந்தாலும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பிரச்னைகள் முழுமையாக தீரவில்லை. தடைகள் நீக்கப்பட்டதால், சற்று மெத்தனமும் ஏற்பட்டுள்ளது.தற்போதும் அங்குள்ள சிலர், 'ஆசாதி' எனப்படும் விடுதலை வேண்டும் என கேட்கின்றனர். அவர்களுடன் பேச வேண்டும். நாட்டுடன் முழுமையாக அவர்களை இணைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X