பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி செலுத்தினால் ‛மொபைல் போன்' ‛டிவி', பரிசு

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021
Share
Advertisement
இம்பால்-மணிப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள் வோருக்கு, 'டிவி, மொபைல் போன்' உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பீரேன் சிங் தலைமையிலான பா.ஜ., தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சியில் உள்ளது. தலைநகர் இம்பாலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க, கலர் டிவி, மொபைல் போன்

இம்பால்-மணிப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள் வோருக்கு, 'டிவி, மொபைல் போன்' உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பீரேன் சிங் தலைமையிலான பா.ஜ., தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சியில் உள்ளது. தலைநகர் இம்பாலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க, கலர் டிவி, மொபைல் போன் உள்ளிட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:இம்பால் மேற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், 24, 31 மற்றும் நவ., 7 ஆகிய தேதிகளில் மூன்று மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.தடுப்பூசி போடுவதில் மக்களின் ஆர்வத்தை துாண்டும் வகையில், 'ஊசி போடு; பரிசு பெறு' திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மூன்று மையங்களிலும் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்ளும் அனைவரும் பரிசு பெற தகுதியானவர்கள். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு முதல் பரிசாக பெரிய திரை டிவி, இரண்டாம் பரிசாக மொபைல் போன், மூன்றாம் பரிசாக போர்வை மற்றும் 10 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


latest tamil news



பாராட்டு

இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி தயாரித்து, சர்வதேச நாடுகளுக்கு அவற்றை வழங்கி வருவதற்காக, மத்திய அரசுக்கு, உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X