பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் கோல்கட்டா தொழிலதிபர் பெயர் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

'பண்டோரா பேப்பர்ஸ்' பட்டியலில் கோல்கட்டா தொழிலதிபர் பெயர்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (7)
Share
புதுடில்லி-மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், 7,220 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி செய்த தொழில் அதிபர் நிலேஷ் பரேக், விர்ஜின் தீவுகளில் போலி நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்திருப்பது, 'பண்டோரா பேப்பர்ஸ்' பட்டியலில் வெளியாகி உள்ளது.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவை சேர்ந்தவர் நிலேஷ் பரேக். இவர், 'ஸ்ரீ கணேஷ் ஜுவல்லரி' என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வந்தார்.

புதுடில்லி-மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், 7,220 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மோசடி செய்த தொழில் அதிபர் நிலேஷ் பரேக், விர்ஜின் தீவுகளில் போலி நிறுவனங்களின் பெயரில் முதலீடு செய்திருப்பது, 'பண்டோரா பேப்பர்ஸ்' பட்டியலில் வெளியாகி உள்ளது.



latest tamil news


மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவை சேர்ந்தவர் நிலேஷ் பரேக். இவர், 'ஸ்ரீ கணேஷ் ஜுவல்லரி' என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வந்தார். 25க்கும் மேற்பட்ட வங்கிகளில் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பினார். இந்த வழக்கை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. மேலும் தங்கம் இறக்குமதி செய்த வகையில், 7,220 கோடி ரூபாய் மோசடி செய்ததை அடுத்து, இவர் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.


latest tamil news


கடந்த 2017ல் மும்பை திரும்பிய நிலேஷ் பரேக்கை, விமான நிலையத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது இவர் ஜாமினில் உள்ளார்.அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மோசடி செய்து சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கும் பட்டியல், பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் சமீபத்தில் வெளியானது. இதில் நிலேஷ் பரேக்கின் பெயர் இடம் பெற்றுஉள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இவர் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள், 'டிரைடன்ட் டிரஸ்ட் கம்பெனி' என்ற பெயரில், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X