பொது செய்தி

இந்தியா

தந்தைக்கு சிறுநீரக தானம் செய்ய சிறையில் உள்ள மகனுக்கு அனுமதி -

Added : அக் 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: தந்தைக்கு சிறுநீரக தானம் செய்ய விருப்பம் தெரிவித்த சிறை கைதிக்கு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், போதை மருந்து வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.இவரது தந்தைக்கு சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது. 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைப்பார்' என,

புதுடில்லி: தந்தைக்கு சிறுநீரக தானம் செய்ய விருப்பம் தெரிவித்த சிறை கைதிக்கு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், போதை மருந்து வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.



latest tamil news


இவரது தந்தைக்கு சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது. 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைப்பார்' என, டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தந்தைக்கு சிறுநீரக தானம் வழங்க, சிறையில் உள்ள மகன் விருப்பம் தெரிவித்தார்.இதையடுத்து, இவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை, ம.பி., உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


latest tamil news


எனவே, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தந்தைக்கு சிறுநீரக தானம் செய்ய விரும்பும் கைதிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதி அளித்தது.'சிறுநீரக தானம் செய்ய உடல் மற்றும் மன அளவில் அவர் தகுதியானவர் என அரசு மருத்துவமனை சான்றளித்தால், ம.பி., உயர் நீதிமன்றத்தில் ஜாமினுக்கு விண்ணப்பிக்கலாம்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மனுவை விரைவாக விசாரித்து, கருணை அடிப்படையில் குற்றவாளிக்கு ஜாமின் வழங்கவும் நீதிமன்றம் பரிந்துரைத்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
18-அக்-202103:37:55 IST Report Abuse
SUBBU நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை –கண்டிப்பாக இந்த நீதிபதி நம்மூர் ஆர்.எஸ்.பாரதி சொன்ன லிஸ்டில் வரமாட்டார்.நீடூழி வாழ்க தந்தையும் மகனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X