உத்தரகண்ட் மாநிலத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

உத்தரகண்ட் மாநிலத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (1)
Share
டேராடூன்-உத்தரகண்டில் நேற்று பலத்த மழை பெய்தது; இன்று மிகப்பலத்த மழை பெய்யும் என்பதால், தேசிய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்து உள்ளது.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது; இன்றும் மழை தொடரும் என்பதால், தேசிய வானிலை ஆய்வு மையம் சார்பில்,

டேராடூன்-உத்தரகண்டில் நேற்று பலத்த மழை பெய்தது; இன்று மிகப்பலத்த மழை பெய்யும் என்பதால், தேசிய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.



latest tamil news


உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்து உள்ளது.மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது; இன்றும் மழை தொடரும் என்பதால், தேசிய வானிலை ஆய்வு மையம் சார்பில், உத்தரகண்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.உத்தரகாசி, சாமோலி, ருத்ரபிரயாக் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news


மழை எச்சரிக்கையை தொடர்ந்து பேரிடர் மீட்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் நேற்று நடந்தது.முடிவில் சார்தாம் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், தங்கள் பயணத்தை ஓரிரு நாட்கள் தள்ளிவைக்கும்படி முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.

நந்தாதேவி மலைப்பகுதியில் மலையேறும் குழுவினர் தங்கள் பயணத்தை தொடரவும், வனப்பகுதிக்குள் நுழையவும் மூன்று நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X