பொது செய்தி

இந்தியா

சாலைக்கேற்ற வேகக் கட்டுப்பாடு: எச்சரிக்கை செய்யும் தொழில் நுட்பம் குறித்து ஐ.ஐ.டி., ஆய்வு

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி-சாலை மற்றும் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்துவது குறித்து எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மைய பேராசிரியர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையின் புள்ளி விபரங்களின்படி, உயிர் பலியை ஏற்படுத்தும்

புதுடில்லி-சாலை மற்றும் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்துவது குறித்து எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில், ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மைய பேராசிரியர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.



latest tamil news


மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையின் புள்ளி விபரங்களின்படி, உயிர் பலியை ஏற்படுத்தும் விபத்துகளில் 70 சதவீதம், வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் ஏற்படுகிறது.சாலை விபத்துகளையும் உயிர் பலியையும் குறைப்பதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, 2019 ஜூலை 1 முதல், வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு சாதனம் இடம்பெறுவது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பை மற்றும் குவஹாத்தி ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த பேராசிரியர்கள், புதிய ஆய்வில் ஈடுபட்டுஉள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது:தற்போது பயன்பாட்டில் உள்ள வேகக் கட்டுப்பாட்டு சாதனம், நாடு முழுதுக்கும் வாகனங்களுக்கு பொதுவானதாக உள்ளது. அதே நேரத்தில் சாலையின் தன்மை, புவியியல் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வேகத்தை கட்டுப்படுத்துவது குறித்து முன்னதாகவே எச்சரிக்கும் முறையை உருவாக்கியுள்ளோம்.


latest tamil news


இதற்காக பல நெடுஞ் சாலைகளில் பயணம் செய்து, ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். ஆய்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகளவில் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறைய. இந்த புதிய முறையால், சாலை விபத்துகள் குறைவதுடன், உயிர் பலி ஏற்படுவதையும் தவிர்க்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கௌடில்யன் - Chennai ,இந்தியா
18-அக்-202118:48:12 IST Report Abuse
கௌடில்யன் அமெரிக்காவில் கார் ஓட்டினால் சென்சர் உங்கள் கார் எவ்வளவு வேகமா செல்கிறது ..அந்த பகுதியில் அனுமதிக்கப்பட்ட வேகம் எவ்வளவு என்று பிளாஷ் பண்ணும் ..மெதுவா போனா உங்க கார் பின்னாடி நிறைய கார் தேங்கி மெதுவா செல்லும் ..வேகமா போனா வீட்டுக்கு மெயிலில் சலான் வரும் ..
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
18-அக்-202113:40:23 IST Report Abuse
தமிழ்வேள் இந்தியாவில் எவனுக்கும் ஒழுங்கான டிரைவிங்கே தெரியாது ...பொது போக்குவரத்து டிரைவர் ஆக குறைந்த பட்சம் மேல்நிலை கல்வி முடித்திருக்க வேண்டும் என ஒரு சட்டம் தேவை ..டூ வீலர்களுக்கு அதிகபட்சம் 50 கி மி வேகம் போதுமானது ..கார்களுக்கு 70 ki.மீ ..கனரக வாகனங்களில் லாரிக்கு 60 கி மீ பஸ்களுக்கு 70 கி மீ அதிகபட்ச வேகம் போதுமானது ..தயாரிப்பு நிலையிலேயே வேக கட்டுப்பாடு அமல்செய்தால் , தனியாக ஒரு கருவி தேவையில்லை ..வண்டிகளை ரீ மாடல் செய்யும் மெக்கானிக்குகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் தேவை ...
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
18-அக்-202110:02:22 IST Report Abuse
Yezdi K Damo எத்தனை விதமான தொழில்நுட்பம் வந்தாலும் இந்தியாவில் எதுவும் வேகாது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X