பொது செய்தி

இந்தியா

'ராம் லீலா' நாடகம் அவமதிப்பு மன்னிப்பு கேட்ட மாணவர்கள்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி-'ராம் லீலா' நாடகத்தை கிண்டல் செய்தது தொடர்பாக, 'எய்ம்ஸ்' மாணவர்கள் சங்கம் மன்னிப்பு கோரி உள்ளது.ஆண்டுதோறும் தசரா பண்டிகையையின்போது, ராம் லீலா எனப்படும் ராமாயண காட்சிகளை கலைஞர்கள் நாடகமாக அரங்கேற்றுவது வழக்கம். இந்த ஆண்டும் டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ராம் லீலா நிகழ்ச்சிகள் நடந்தன.டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி மாணவர்கள்

புதுடில்லி-'ராம் லீலா' நாடகத்தை கிண்டல் செய்தது தொடர்பாக, 'எய்ம்ஸ்' மாணவர்கள் சங்கம் மன்னிப்பு கோரி உள்ளது.latest tamil news


ஆண்டுதோறும் தசரா பண்டிகையையின்போது, ராம் லீலா எனப்படும் ராமாயண காட்சிகளை கலைஞர்கள் நாடகமாக அரங்கேற்றுவது வழக்கம். இந்த ஆண்டும் டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ராம் லீலா நிகழ்ச்சிகள் நடந்தன.டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி மாணவர்கள் அரங்கேற்றிய ராம் லீலா நாடகம்,பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சிலர், ராமாயண காட்சிகளை நகைச்சுவை ரசனையுடன் அரங்கேற்றினர்.இந்த நாடகத்தின் காட்சிகள் அடங்கிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு, ஹிந்து அமைப்பினர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.


latest tamil news


இதுகுறித்து வெளியிட்ட 'டுவிட்டர்' பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:ராம்லீலா நாடகத்தை கேலியாக அரங்கேற்றிய அந்த மாணவர்கள் சார்பாக, நாங்கள் மன்னிப்பு கேட்டுகிறோம். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நாடகத்தை அவர்கள் அரங்கேற்றவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
19-அக்-202112:07:45 IST Report Abuse
Krishnamurthy Venkatesan ராமாயணம் மற்றும் மகா பாரதம் - இவ்விரண்டையும் ஆழ்ந்து ஆராய்ந்து படித்தவர்கள் இவற்றை போற்றுகின்றனர். மேலோட்டமாக படிப்பவர்கள் (நாத்தீகவாதிகள், பிற மதத்தினர்) உள்ளர்த்தம் தெரியாமல் கேலி கிண்டல் செய்கிறார்கள். நமது குழந்தைகளுக்கு சிறு வயது முதல் இவற்றை கர்மா சிரத்தையுடன் கற்பிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
18-அக்-202111:35:35 IST Report Abuse
Soumya ஆமா கிண்டல் பண்ணுன்னுனவனுங்க ஏன் பெயரை குறிப்பிட மாட்டுரிங்க
Rate this:
18-அக்-202114:01:31 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்உனக்கே சிரிப்பா இல்ல :: ராமாயணம் இந்தக்காலத்து படி சொன்னால் ஒரு kidnapping வழக்கு அவ்வளவு தான் , மஹாபாரதம் LAND அபகரிப்பு வழக்கு அன்னன் தம்பிகளுக்குள் அதுவும் சொந்த தம்பி இல்லை இரண்டு மனைவி என்று வந்ததால் இதை சொல்லி மாணவர்கள் ஏற்றுக்கொள்ளுவார்கள அதனால் தான் இப்படி...
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
18-அக்-202110:46:49 IST Report Abuse
Kumar ஆமா குண்டு வைப்பது,கொலை செய்வது,அம்பு விட்டு கொல்வது இதுதான் பண்பாடு. உலகத்திலே வழிபாட்டுத்தலங்களில் குண்டு வைப்பது தான் ஒரே பண்பாடு. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X