இதையும் கவனிங்க! விளக்குகள், சிக்னல்கள் எரிவதில்லை; வாகன ஓட்டிகள் சிரமம்

Added : அக் 18, 2021
Advertisement
நரிக்குடி : மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பிரிவு ரோடுகளில் உள்ள விளக்குகள், சிக்னல்கள் பெரும்பாலும் எரிவதில்லை. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதோடு, ரோட்டை கடக்க முயலும் பலர் விபத்தில் சிக்குகின்றனர்.வாகன நெரிசல் இன்றி விபத்தில்லாமல் விரைவாக முக்கிய ஊர்களுக்கு சேர வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் முக்கிய சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு

நரிக்குடி : மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பிரிவு ரோடுகளில் உள்ள விளக்குகள், சிக்னல்கள் பெரும்பாலும் எரிவதில்லை. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதோடு, ரோட்டை கடக்க முயலும் பலர் விபத்தில் சிக்குகின்றனர்.

வாகன நெரிசல் இன்றி விபத்தில்லாமல் விரைவாக முக்கிய ஊர்களுக்கு சேர வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் முக்கிய சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. இதை தனியார் நிறுவனத்தினர் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருவதோடு கழிப்பறை, வாகன ஓட்டிகளுக்கு ஓய்வறை, அவசர உதவி, பிரிவு ரோடுகளில் மின் விளக்குகள், ஹைமாஸ் விளக்குகள், மிளிரும் விளக்குகள், மரம் நடுவது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

ஆனால் பெரும்பாலான அடிப்படை பணிகளை இந்நிறுவனங்கள் செய்வதில்லை. பிரிவு ரோடுகளில் ஏற்படுத்தப்பட்ட ஹைமாஸ் விளக்குகள், மிளிரும் விளக்குகள் பெரும்பாலும் எரியவில்லை. இதனால் பிரிவு ரோடு இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதிவேகமாக வருகின்றனர்.

குறிப்பாக மதுரை- - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் காரியாபட்டி - கள்ளிக்குடி, கல்குறிச்சி- மல்லாங்கிணறு, அருப்புக்கோட்டை பிரிவு ரோடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிளிரும் விளக்குகள் இருந்தும் செயல்படாமல் இருப்பதால் விபத்து ஏற்படுகிறது. அடிக்கடி ஏற்படும் விபத்தை தவிர்க்க பழுதான மின் விளக்குகள், சிக்னல்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்டு கொள்வதே இல்லை

நான்கு வழிச் சாலைகளில் அடிப்படை வசதிகளை முறையாக பராமரிப்பது கிடையாது. ஹைமாஸ் விளக்குகள், மிளிரும் சிக்னல்கள் பழுதானால் மாதக் கணக்கில் கண்டு கொள்வது கிடையாது. இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அசோக் குமார், சமூக ஆர்வலர், நரிக்குடி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X