பொது செய்தி

இந்தியா

ராமர் கோவில் கருவறையில் ராம நவமியில் சூரிய ஔி

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
அயோத்தி-ஆண்டு தோறும் ராம நவமி அன்று கருவறைக்குள் சூரிய ஒளி விழும் வகையில் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட உள்ளதாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்து உள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் துவங்கி வேகமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே ஆண்டு தோறும் ராம

அயோத்தி-ஆண்டு தோறும் ராம நவமி அன்று கருவறைக்குள் சூரிய ஒளி விழும் வகையில் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட உள்ளதாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்து உள்ளது.



latest tamil news


உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் துவங்கி வேகமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே ஆண்டு தோறும் ராம நவமியின்போது கோவில் கருவறைக்குள் சூரிய ஒளி விழும் வகையில் ராமர் கோவில் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news


இதுகுறித்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் காமேஸ்வர் சவுபால் கூறியதாவது:ஒடிசாவில் உள்ள சூரிய கோவிலுக்குள் சூரிய ஒளி விழுகிறது. இதை அடிப்படையாக வைத்து, ஆண்டு தோறும் ராம நவமியின்போது கருவறைக்குள் சூரிய ஒளி விழும் வகையில் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்காக வானியல் வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கோவிலை 2023 டிசம்பருக்குள் திறக்கும் வகையில் பணிகள் விரைவாக நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-அக்-202114:52:13 IST Report Abuse
சம்பத் குமார் 1). விரைவாக இராமபிரான் திருக்கோயிலை கட்டி முடிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.2). இராம இராஜ்ஜியம் பரத கண்டம் முழுவதும் திரு மோடி அவர்களால் சீரும் சிறப்பாக நடந்து கொண்டு இருப்பதற்கு இராமபிரானுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.3). பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே இதற்கு சாட்சி. அவர்களே உலகை இந்தியா திரு மோடியின் கீழ் ஆண்டு கொண்டு இருக்கிறது என்று ஒப்பு கொண்டதை நாம் எண்ணி உவகை கொள்ள வேண்டும். சிவ சூரிய நாராயண போற்றி.‌ நன்றி ஐயா.
Rate this:
Cancel
18-அக்-202112:43:36 IST Report Abuse
ஆரூர் ரங் சூரிய வம்ச ஸ்ரீராமன் 🙏 சூரிய தரிசனம் காணட்டும்
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
18-அக்-202112:06:31 IST Report Abuse
Duruvesan உன்னையும், குண்டு வைக்கும் உன் கூட்டத்தையும் பிடிக்காது
Rate this:
அத்வைத் ராமன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
18-அக்-202113:58:20 IST Report Abuse
 அத்வைத் ராமன் எனக்கு தர்மர் , அதுவும் பெண்டாட்டியை வைத்து சூது ஆடிய தர்மர் , இதை இப்போ உள்ள மக்கள் கேட்டு தவறு செய்ய வாய்ப்பு உள்ளது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X