வெளி மாநிலத்தவர்களை சுட்டுக் கொல்லும் பயங்கரவாதிகள்: காஷ்மீரில் பதற்றம்

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து அப்பாவி வெளிமாநில தொழிலாளர்களை சுட்டுக் கொல்லும் போக்கு தொடர்கிறது. ஏற்கனவே 5 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், போலீசார், ராணுவத்தினரின் தீவிர கண்காணிப்புகளுக்கிடையேயும் இன்று இருவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் தாக்குதலில் பள்ளி தலைமையாசியர், ஆசிரியர் மற்றும்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து அப்பாவி வெளிமாநில தொழிலாளர்களை சுட்டுக் கொல்லும் போக்கு தொடர்கிறது. ஏற்கனவே 5 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், போலீசார், ராணுவத்தினரின் தீவிர கண்காணிப்புகளுக்கிடையேயும் இன்று இருவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.



latest tamil news


காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் தாக்குதலில் பள்ளி தலைமையாசியர், ஆசிரியர் மற்றும் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பிரபலமான மருந்தாளுனர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். அத்தாக்குதலில் பீகார் போன்ற மாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக காஷ்மீர் வந்து வேலை பார்த்தவர்களும் கொல்லப்பட்டனர். வன்முறையை தூண்ட பயங்கரவாதிகள் திட்டமிட்டு இது போன்ற கலவரங்களில் ஈடுபவதாக போலீசார் தெரிவித்தனர்.

அத்தாக்குதல் சம்பங்களை தொடர்ந்து மிகப்பெரிய பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கிவிட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9 என்கவுன்டர் சம்பவங்களில் 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பிரிவினைவாத குழுக்களுடன் தொடர்பிலிருந்த 900 பேரை கைது செய்தனர். இருப்பினும் நேற்று உ.பி.,யைச் சேர்ந்த சாகிர் அகமது எனும் தச்சு தொழிலாளி மற்றும் பீகாரைச் சேர்ந்த அரபிந்த் குமார் எனும் வியாபாரி ஸ்ரீநகர் மற்றும் புல்வாமா பகுதிகளில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


latest tamil news


வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீருக்குள் வர அஞ்ச வேண்டும் என்பதற்காக போலீசார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இத்தாக்குதலை பயங்கரவாதிகள் அரங்கேற்றுகின்றனர். நேற்றைய பரபரப்பு அடங்குவதற்குள் இன்று (அக்., 17) குல்காம் வான்போ பகுதியில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
18-அக்-202111:31:33 IST Report Abuse
Nellai tamilan தீவிரவாத பன்றிகளை சுட்டுவதில் தவறே இல்லை
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
18-அக்-202111:30:15 IST Report Abuse
ஆனந்த் உபியில் நடந்த கொலைக்கு சில்லறை ஊடகங்களும் .. எதிர்க்கட்சிகளும் பொங்கின .. ஆனால் இந்துக்கள் காஷ்மீர் மற்றும் பங்களாதேஷில் கொல்லப்படுகிறார்கள் சுரணையற்ற இந்தியர்கள் அமைதியாக இருக்கிறார்கள்
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
18-அக்-202111:14:16 IST Report Abuse
Rasheel மூர்க்கங்களின் டிசைன அதுதானே. காட்டுமிராண்டி மூற்க்க கூட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X