அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாரிசுக்காக மா.செ.,க்கள் கூட்டமா? வைகோவுக்கு அதிருப்தியாளர் கடிதம்!

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை : 'உங்கள் மகன் துரையின் அரசியல் பிரவேசத்திற்காக, மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டுவது, தமிழக அரசியல் வரலாற்றில், வேறு எந்த கட்சியும் செய்யாத கேலிக்கூத்து' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு, அதிருப்தியாளர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.கடிதத்தில் அதிருப்தியாளர்கள் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மாபெரும் அரசியல் சக்தியாக, நீங்கள் உருவாகி இருக்க வேண்டும்.
MDMK,Vaiko,வைகோ

சென்னை : 'உங்கள் மகன் துரையின் அரசியல் பிரவேசத்திற்காக, மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டுவது, தமிழக அரசியல் வரலாற்றில், வேறு எந்த கட்சியும் செய்யாத கேலிக்கூத்து' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு, அதிருப்தியாளர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

கடிதத்தில் அதிருப்தியாளர்கள் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மாபெரும் அரசியல் சக்தியாக, நீங்கள் உருவாகி இருக்க வேண்டும். ஆனால், சரியான நேரத்தில் தவறான முடிவுகள் எடுத்ததால், அதை இழந்து விட்டீர்கள்.தென்காசி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வுடன் நேரடி கூட்டணி; அ.தி.மு.க.,வுடன் மறைமுக கூட்டணி என நீங்கள் வகுத்த வியூகங்கள், உங்கள் நம்பகத்தன்மையை விமர்சனத்திற்கு உள்ளாக்கி உள்ளன.


latest tamil news


'அரசியல் வாழ்வில், 55 ஆண்டுகள் கஷ்டப்பட்டுள்ளேன்; போராட்டம், சிறை, நடை பயணங்கள் என்னோடு போகட்டும்; என் மகனும் இனி அரசியல் கஷ்டப்படக் கூடாது; அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை' என்றீர்கள்.அது உண்மையானால், நீங்கள் இருக்கும் திசை பக்கமே துரை தலை வைத்து படுக்க மாட்டார்.

ஆனால், ருசி கண்ட பூனை உரி தாண்டும் என்பதை போல, துரை நேரடியாக அராசியலுக்கு வரும் முன், மறைமுக அரசியல் பிரவேசம் செய்து விட்டார். அதனால் தான், உங்களுக்கு தெரியாமல் துரை அரசியல் செய்கிறார் என்று ஒப்புக் கொள்கிறீர்கள். முதன் முதலாக, உங்கள் மகன் துரையின் அரசியல் பிரவேசத்திற்காக, மாவட்ட செயலர்கள் கூட்டம் கூட்டுவது, தமிழக அரசியல் வரலாற்றில், வேறு எந்த கட்சியும் செய்யாத கேலிக்கூத்து. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-அக்-202117:41:51 IST Report Abuse
Bhaskaran அதெப்புடி கடையை அடுத்தவன் கிட்டேயா ஒப்படைக்கமுடியும் வீட்டில் பெண்கள் திட்டு வாங்க
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
18-அக்-202117:08:52 IST Report Abuse
INDIAN Kumar யார் அந்த அதிருப்தியாளர்கள் ???
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
18-அக்-202115:13:10 IST Report Abuse
Kumar ஓட்ட ,ஓடசலா இருந்தாலும் அந்த சொத்து வாரிசுக்குத்தான் போக வேண்டும் என்ற உயரிய கொள்கை பிடிப்பாளர் வைகோ அவர்கள்தான். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X