அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்தாரா வளர்மதி?

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
அ.தி.மு.க., துவக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, அக்கட்சியின் சார்பில் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. ஓராண்டுக்கு பொன் விழாவை எப்படி எல்லாம் கொண்டாடலாம் என்பது குறித்து, இம்மாதம் 11ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது.அந்த கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மூத்த
MGR, ADMK, Valarmathi, Ex Minister, AIADMK

அ.தி.மு.க., துவக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, அக்கட்சியின் சார்பில் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. ஓராண்டுக்கு பொன் விழாவை எப்படி எல்லாம் கொண்டாடலாம் என்பது குறித்து, இம்மாதம் 11ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது.

அந்த கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், 'எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்ட அ.தி.மு.க., ஆலமரமாக வளர்ந்து நிற்க அவரே காரணம். கட்சி அலுவலகத்திற்கு ராயப்பேட்டையில் சொந்த இடத்தைக் கொடுத்தார். அதன் இன்றைய மதிப்பு பல கோடி ரூபாய். 'கட்சிக்காக எழுதி வைத்துச் சென்ற அந்த வள்ளலின் நினைவை போற்றும் விதமாக, கட்சி அலுவலகத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் சூட்ட வேண்டும்' என பலரும் பேசினர்.


சலசலப்பு


கட்சியின் வழிகாட்டு குழு உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகரன் பேசுகையில், 'எம்.ஜி.ஆருக்கு பின், அவருடைய மனைவி ஜானகி தான், கட்சிக்கென இவ்வளவு பெரிய கட்டடத்தைக் கொடுத்தார்' என்றார். அப்போது குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் வளர்மதி, 'இதற்கு ஏதும் உயில் இருக்கிறதா' எனக் கேட்க, கூட்டத்தில் சலசலப்பு எழுந்திருக்கிறது.

எம்.ஜி.ஆர்., பெயரை கட்சி அலுவலகத்துக்கு சூட்டுவதில், வளர்மதிக்கு உடன்பாடில்லாமல் பேசுகிறார் என நினைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின், எம்.ஜி.ஆர்., புகழ்பாடி பலரும் பேச, கூட்ட முடிவில் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு, 'எம்.ஜி.ஆர்., மாளிகை' என, பெயர் சூட்டப்படுவதாக ஒரு மனதாக அறிவிக்கப்பட்டது.


latest tamil newsஅர்ச்சனை


கூட்டம் அமைதியாக முடிந்தாலும், வளர்மதியின் கருத்து, வெளியில் இருந்த எம்.ஜி.ஆர்., தொண்டர்களுக்கு வேகமாக பரவியது. அவர்கள் வளர்மதியை போனில் அழைத்து திட்டினர். எம்.ஜி.ஆர்., தொண்டரும், குடிசை மாற்று வாரிய முன்னாள் தலைவருமான ஓம்பொடி பிரகாஷ் சிங் என்பவர், வளர்மதிக்கு போன் போட்டு பேசி, அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதை அப்படியே பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவிட, விவகாரம் பற்றி எரிகிறது. வளர்மதிக்கு எதிராக, எம்.ஜி.ஆர்., ரசிகர்களாக இருக்கும் அ.தி.மு.க.,வினர் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர்.


ரசிகர்கள் பாராட்டு


இது குறித்து, ஓம் பொடி பிரகாஷ் கூறியதாவது: எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது தான் அ.தி.மு.க., அவர் கொடுத்த சொத்து தான் ராயப்பேட்டையில் உள்ள, கட்சியின் பிரமாண்ட தலைமை அலுவலகம். கட்சிக்காக அவர் செய்த காரியங்கள் சொல்லி மாளாதவை. அப்படிப்பட்ட ஒரு மாபெரும் தலைவன் பெயரை, அவர் கொடுத்த இடத்தில் உருவான கட்டடத்திற்கு சூட்ட, கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் வளர்மதி.

கட்சியின் மூத்த தலைவர்களான வேலுமணியும், வைத்திலிங்கமும் எதிர்த்து, வளர்மதியை பேசவிடாமல் உட்கார வைத்துள்ளனர். அவர் எதிர்த்தால் எம்.ஜி.ஆர்., புகழ் மங்கி விடுமா?தகவல் அறிந்து, என்னை போன்ற லட்சோப லட்சம் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் மனம் பதறியது. பொறுக்க முடியாமல் வளர்மதிக்கு போன் போட்டேன்; மிகக் கடுமையாக பேசினேன். அவரும் வம்புக்கு வாயாடி பேசினார். கேட்க வேண்டியதை எல்லாம் கேட்டுவிட்டு, போனை துண்டித்து விட்டேன்.

எம்.ஜி.ஆர்., புகழுக்கே குறுக்கே நிற்கும் கட்சிக்கார பெண்மணியை விடக் கூடாது என முடிவெடுத்து, அவரின் எம்.ஜி.ஆர்., விரோத பேச்சு குறித்து, சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன். என்னுடைய முயற்சிகளையும், உணர்ச்சிகளையும், உண்மையான எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


'கனவில் கூட நினைக்க மாட்டேன்!'


ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் தலைமையக கட்டடம் குறித்து ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், 'ஜானகி தான், இந்த கட்டடத்தை கட்சிக்கு கொடுத்தார்' என்றார். அப்போது குறுக்கிட்ட நான், 'அவர் உயில் ஏதும் எழுதி வைத்திருந்தால், அதை எடுத்து பார்த்து தெளிவு பெறலாம்' என, ஆலோசனை சொன்னேன். அதற்கு யாரும், 'ரியாக்ட்' செய்யவில்லை.

இடைமறித்து நான் சொன்ன கருத்து, கட்சி அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர்., பெயர் வைக்க நான் எதிர்ப்பு தெரிவிப்பது போல, வெளியில் தவறாகப் பரவியது. எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் எனக் கூறி, சிலர் என்னை மிரட்டுவது போல பேசுகின்றனர்.

கடந்த 1973 இறுதியில் நடந்த கட்சியின் திருவான்மியூர் மாநாட்டில், என்னை பேச வைத்து அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர்., அதே மேடையில் என்னை ஐந்து நிமிடம் பாராட்டி பேசினார். அதன் பின்பே, வளர்மதியை ஊர் உலகம் அறியும். என் குழந்தைகளுக்கு பெயர் சூட்டியவர் எம்.ஜி.ஆர்., தான். அவரால் எம்.எல்.ஏ., ஆனவள். எம்.ஜி.ஆர்., போட்ட பிச்சையில் வளர்ந்த நான், அவருக்கு எதிராக கனவில் கூட நினைக்க மாட்டேன்.

மூத்த மகன் முத்தழகன் உடல் பாதிக்கப்பட்ட போது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்து, உயிரைக் காப்பாற்றியவர் எம்.ஜி.ஆர்., தான். இப்படி எத்தனையோ விஷயங்கள் எம்.ஜி.ஆரால் எனக்கு கிடைத்தவை. சொந்த கட்சி எதிரிகள், இத்தனை துாரம் சிந்தித்து பெயரைக் கெடுக்க முயல்வர் என, நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை.


- வளர்மதி, முன்னாள் அமைச்சர்,- மகளிர் அணி செயலர், அ.தி.மு.க.,- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-அக்-202117:37:34 IST Report Abuse
Bhaskaran அறிவாலயத்துக்கு அம்மா தயார்
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
18-அக்-202116:26:39 IST Report Abuse
BASKAR TETCHANA வந்து விட்டார் அறிவாலய அடிமை ஆசிரியர். வாழக உங்களின் தி.மு.க.வின் தொண்டு.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
18-அக்-202116:25:17 IST Report Abuse
BASKAR TETCHANA இவளை போன்றவர்கள் இருந்து தான் கட்சி எம்.ஜி.ஆர். ஜெயா பெயரை கெடுத்து வருகின்றனர். இந்த நாதாரிகளை கட்சியை விட்டு வெளியே தள்ள வேண்டும். சசிகலா வந்தவுடன் இவர்களின் திமிர் ஆட்டம் கொஞ்சம் அதிகமாக உள்ளது. இந்த கே.சி. பழனிசாமி புகழேந்தி மைத்திரேயன் இன்னும் சிலர் உள்ளனர் இவர்கள் பதவிக்கும் பணம் சம்பாதிக்கும் குறிக்கோளோடு கட்சிக்கு வந்தவர்கள். ரோட்டில் ஒன்று நின்று கொண்டு குறைக்குமாம் அது போல் தான் இவர்கள். வெட்கம் கேட்ட ஜென்மங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X