'பை' மதிப்பின் 1,560 தசம எண்களை கூறி 6 வயது இந்திய சிறுமி சாதனை

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சிங்கப்பூர் : 'பை' மதிப்பின், 1,560 தசம எண்களை மனப்பாடம் செய்து கூறியதன் வாயிலாக, சிங்கப்பூர் நாட்டின் சாதனை புத்தகத்தில், 6 வயதான இந்திய சிறுமி இடம்பிடித்துள்ளார்.தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தம்பதியரான சண்முகம் - வெண்ணிலா முனுசாமியின் மகள் இஷானி, 6, சிங்கப்பூர் நாட்டின் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.கணிதத்தில்
Pi digits, Singapore Record, Pi Memorisation Record, Singapore Book of Records

சிங்கப்பூர் : 'பை' மதிப்பின், 1,560 தசம எண்களை மனப்பாடம் செய்து கூறியதன் வாயிலாக, சிங்கப்பூர் நாட்டின் சாதனை புத்தகத்தில், 6 வயதான இந்திய சிறுமி இடம்பிடித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளி தம்பதியரான சண்முகம் - வெண்ணிலா முனுசாமியின் மகள் இஷானி, 6, சிங்கப்பூர் நாட்டின் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.கணிதத்தில் இடம்பெறும், பை என்பதன் மதிப்பு, 3.14 ஆகும். எனினும், இது, 'ரவுண்ட் ஆப்' செய்யப்பட்ட மதிப்பு.


latest tamil news


இந்நிலையில், இந்த பை மதிப்பில் உள்ள, 1,560 தசம எண்களை மனப்பாடம் செய்து 10 நிமிடங்களில் ஒப்பித்து இஷானி அசத்தி உள்ளார். இஷானியின் இந்த சாதனையை, 'சிங்கப்பூர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அமைப்பின் அதிகாரிகள் நேரில் பார்த்து அங்கீகரித்தனர். ஏற்கனவே 2018ம் ஆண்டு சான்சி சூரஜ் என்ற சிங்கப்பூர் மாணவி 1,505 தசம எண்களை கூறி செய்த சாதனையை, தற்போது இஷானி முறியடித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு, பை மதிப்பில் உள்ள, 70 ஆயிரம் தசம எண்களை பார்க்காமல் கூறி, இந்தியாவை சேர்ந்த ராஜ்வீர் மீனா, 21, என்ற இளைஞர் கின்னஸ் உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-அக்-202117:39:02 IST Report Abuse
Bhaskaran வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
18-அக்-202116:04:35 IST Report Abuse
சம்பத் குமார் 1). வாழ்த்துக்கள், இராமானுஜர் போல் வாழ்வாயாக. ஜெயம் உண்டாகட்டும்.2). Fibonacci serious, Zero, arithmetic, negative numbers, algebra, trigonometry, Golden ratio போன்ற கண்டிபுகளை சுமார் இராண்டாயிரம் மூன்றாயிரம் வருடங்களுக்கு முன்னேரே நாம் பயன்படுத்தி வந்தோம். 3). நமது இந்திய mathematicsயை தற்பொழுது உலகம் முழுவதும் பயன்படுத்துகின்றன்ர். ஏன் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நமது இந்திய mathematics மூலம் நடைபெறுகின்றது. நன்றி ஐயா. ஹரி ஓம்.
Rate this:
Cancel
18-அக்-202115:59:24 IST Report Abuse
ஆரூர் ரங் பையின் மதிப்பு கண்டுபிடிப்பு நம் பாரதத்தினுடையது. ரிக் வேதத்தில் உள்ளது.👌பெருமை கொள்வோம்🙏. A Sloka in the 10th of Rig Veda appears to be written for praising Lord Indra. The technical translation of that Sloka gives the value of Pi up to 28 digits accurately. It is not until the invention of the computers that the western mathematicians could get this value up to 16 digits accurately. 👌.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X