முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (48)
Share
சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு, குவாரி மற்றும் அவரது அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் ரெய்டு முடிந்துள்ள நிலையில் தற்போது விஜயபாஸ்கரும் சொத்துக்குவிப்பு வழக்கில்

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு, குவாரி மற்றும் அவரது அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் ரெய்டு முடிந்துள்ள நிலையில் தற்போது விஜயபாஸ்கரும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ளார்.latest tamil news2013 முதல் 2021 வரை தமிழக அமைச்சரவையில் இருந்த சி.விஜயபாஸ்கர் குவாரி மற்றும் அறக்கட்டளை துவக்கி பல கோடி ரூபாய்க்கு முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர்.


latest tamil newsஇதன் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி, புதுக்கோட்டை 6 மாவட்டங்களில் 43 இடங்களில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். திருவேங்கைவாசல் குவாரியிலும், சகோதரர் உதயக்குமார் , மனைவி ரம்யா, தந்தை , உதவியாளர் குருபாபு ஆகியோர் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது. கோவையில் ராமநாதபுரம் மனைவியின் தந்தை வீட்டிலும் ரெய்டு நடக்கிறது.


மேலும் 5 இடங்கள்:

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய மேலும் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். மதுரையில் இரண்டு இடங்களிலும், சென்னை, திருச்சி, புதுக்கோட்டையில் தலா ஒரு இடத்திலும் சோதனை நடந்து வருகிறது. இதனால் சோதனை நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.முறைகேடாக பெற்ற சொத்துக்களின் விபரம்:

7 டிப்பர் லாரி, 10 டிரான்சிஸ்ட் மிக்சர், ஒரு ஜே.சி.பி - ரூ.6.5 கோடி மதிப்பு
ஒரு பி.எம்.டபிள்யு கார் - ரூ.53 லட்சம் மதிப்பு
85 சவரன் நகை - ரூ.40.58 லட்சம் மதிப்பு
காஞ்சிபுரத்தில் விவசாய நிலம் - ரூ.3.99 கோடி மதிப்பு
சென்னையில் வீடு - ரூ.14.57 கோடி மதிப்பு
இது போக பிற நிறுவனங்களில் முதலீடு செய்தது - ரூ.28.68 கோடி மதிப்பு

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X