கேரளாவுக்கு ரெட் ‛அலர்ட்': பந்தலூர், கூடலூரில் பேரிடர் மீட்பு குழு!

Updated : அக் 18, 2021 | Added : அக் 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருவனந்தபுரம்: சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரிக்கு மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (அக்.,18) காலை, 8:00 மணி நிலவரப்படி, பந்தலூரில், 94 மி.மீ., தேவாலா, 60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதுவரை, சராசரி மழை அளவு, 60.5 மி.மீ., பதிவாகியுள்ளது. கேரளாவில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளதால், அங்கு ரெட் அலர்ட்
Kerala, Red Alart, Panthalur, Koodalur, Fireman Alart, கேரளா, ரெட் அலர்ட், பந்தலுார், கூடலுார், மீட்புப்படை, தயார்,

திருவனந்தபுரம்: சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரிக்கு மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (அக்.,18) காலை, 8:00 மணி நிலவரப்படி, பந்தலூரில், 94 மி.மீ., தேவாலா, 60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதுவரை, சராசரி மழை அளவு, 60.5 மி.மீ., பதிவாகியுள்ளது. கேரளாவில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளதால், அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


latest tamil news


நீலகிரி கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா கூறுகையில், ‛‛கேரளாவில் மழை அதிகரித்திருப்பதால், சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கேரளா எல்லையை ஒட்டியுள்ள பந்தலூர், கூடலூரியில் மழை அதிகரித்துள்ளது. அப்பகுதிகளில் பேரிடர் பாதிப்பை தடுக்க வருவாய் உட்பட அனைத்து துறையினருடன் மீட்புக் குழுவினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை நிவாரண முகாமில் யாரும் தங்க வைக்க வில்லை,‛‛ என்றார்.


latest tamil news


அணைகளில் நீர்மட்டம் உயர்வு: குந்தா, பைக்காரா மின் வட்டத்தின் கீழ், 13 அணைகள், 30 தடுப்பணைகள் உள்ளன. பரவலான மழையால், மேற்கு தொடர்ச்சி மலை நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அப்பர்பவானி, பைக்காரா, அவலாஞ்சி, எமரால்டு, முக்குறுத்தி, பார்சன்ஸ்வேலி, கிளன் மார்கன் அணைகளுக்கு வினாடிக்கு, 150 லிருந்து 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் நீர் வரத்து அதிகரிப்பாலும் அணைகள் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-அக்-202113:15:14 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் நேற்று ஒரு சிங்கி இந்த விசயத்தில் கூட மதம் என்று சொல்லி கொண்டு இருந்தான் / PUYAL வெள்ளம் KORAANAA இதற்க்கு மதம் எல்லாம் தெரியாது என்று இந்த மத வாதிகளுக்கு தெரியவில்லை
Rate this:
Cancel
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
18-அக்-202111:32:22 IST Report Abuse
tata sumo swamiye saranam ayyappa
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X